ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى)
பாகம் – 14
- அல்லாஹ்விற்கு அழகிய திருநாமங்கள் இருக்கிறது என்று குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் ஜஹ்மிய்யாக்களின் இந்த கொள்கையை விமர்சித்த முஃதஸிலாக்கள் அல்லாஹ்விற்கு பெயர்கள் இருப்பது உண்மை ஆனால் அவனுடைய பண்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என கூறினர்.
- இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ பல ஆய்வுகளுக்கு பின்னர் அல்லாஹ்வின் நாட்டம் தொடர்பான பண்புகளை மட்டும் மறுக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.
இவர் அல்லாஹ்வின் பெயர்களை ஏற்றுக்கொண்டு அவனது செயல்கள் சம்மந்தமான பண்புகளை மறுப்பது என முடிவெடுத்தார்.
அல்லாஹ்வின் இருப்பு சம்மந்தமான 7 பண்புகளாகிய(அறிவு, நாட்டம், சக்தி, கேள்வி, பார்வை, பேச்சு, என்றென்றும் உயிரோடிருத்தல்) இவைகளை அல்லாஹ்வுக்கு கட்டாயமாக இருக்க வேண்டிய பண்புகள் எனவும் மீதமுள்ள அனைத்து பண்புகளுக்கும் மாற்று அர்த்தம் கொடுத்தார்.
உதாரணம்:-
அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்ற ஹதீஸிற்கு அல்லாஹ் இறங்குகிறான் என்றால் அவனது அருள் இறங்குகிறது என்று பொருள் கொள்ள வேண்டும் என்ற மாற்று விளக்கமளித்தார்.
அல்லாஹ் வின் கை என்று வார்த்தைக்கு அல்லாஹ்வின் சக்தி என மாற்று விளக்கமளித்தார்.
அல்லாஹ்வின் முகம் என்ற சொல்லுக்கு அல்லாஹ்வின் திருப்தி
அல்லாஹ்வின் ரஹ்மத் என்று கூறப்பட்ட இடங்களில் அருள் என்று அர்த்தம் கொடுப்பது
அல்லாஹ்வின் கோபம் என்ற வார்த்தைக்கு பழிவாங்குதல் என மாற்று விளக்கமளித்தார்
இது தான் அஷ்அரிய்யா கொள்கை என்று அழைக்கப்படுகிறது.
இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ சில நாட்கள் மக்கள் கண்முன்னில் வராமல் இருந்துவிட்டு பிறகு ஒரு நாள் வெளியே வந்து “அல்லாஹ்வின் அஸ்மா சிஃபாத் சம்மந்தமான உலமாக்களின் புத்தகங்களை நான் படித்தேன். ஆகவே என்னுடைய கொள்கை தவறானதும் அவர்களது கொள்கையே சரியானது” என்றும் பிரகடனப்படுத்தினார்கள். அவர் அந்த கொள்கையை விட்டும் வெளியேறி விட்டார் ஆனால் அந்த கொள்கை அவ்வாறே இருக்கிறது.
அவர் சரியான கொள்கைக்கு வந்த பிறகு அஷ்அரிய்யா கொள்கைக்கு எதிராக
الإبانة عن أصول الديانة அல் இபானா அன் உஸூலி தியானா
مقالات الإسلاميين மகாலாத்துல் இஸ்லாமிய்யீன்
என்ற 2 புத்தகங்களை எழுதியுள்ளார்கள்.
- அபூமன்சூர் அல் மாத்துருஜீ என்பவறின் கொள்கையை உடையவர் தான் மாத்துறிஜிய்யா கொள்கையினர் என்று அழைக்கப்படுகின்றனர். மாத்துருஜிய்யாக்களும் அஷாஇராக்களும் ஏறக்குறைய ஒரே கொள்கையை உடையவர்களாவர்.
கருத்துரைகள் (Comments)