ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 15

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 15

🌷 قال لها: «أين الله؟ قالت: في السماء، قال: من أنا؟ قالت: أنت رسول الله، قال: أعتقها فإنها

مؤمنة»؛ 

முஆவியத் இப்னுல் ஹகம் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் தனது அடிமையை விடுதலை செய்வதை பற்றி ஆலோசனை கேட்டபோது அந்த பெண்ணிடம் நபி (ஸல்) அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்று கேட்டார்கள் அப்பெண் வானதிலிருக்கிறான் என்று பதிலளித்தார்கள் அப்போது நபி (ஸல்) நான் யார் என கேட்டார்கள் அப்போது அவர் நீங்கள் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என பதிலளித்தபோது. அவளை விடுவித்து விடுங்கள் அவள் முஃமினானவள் என்று கூறினார்கள். 

🌷 அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான் என 7 இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

ஸூரத்துல் முல்க் 67:17

اَمْ اَمِنْتُمْ مَّنْ فِى السَّمَآءِ اَنْ يُّرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا‌ ؕ فَسَتَعْلَمُوْنَ كَيْفَ نَذِيْرِ‏ 

அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

🌷 மூஸா (அலை) அல்லாஹ் வானத்திலிருக்கிறான் என்று பிரச்சாரம் செய்தார்கள் 

ஸூரத்துல் கஸஸ் 28:38

وَقَالَ فِرْعَوْنُ يٰۤـاَيُّهَا الْمَلَاُ مَا عَلِمْتُ لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرِىْ‌ ۚ فَاَوْقِدْ لِىْ يٰهَامٰنُ عَلَى الطِّيْنِ فَاجْعَلْ لِّىْ صَرْحًا

لَّعَلِّىْۤ اَطَّلِعُ اِلٰٓى اِلٰهِ مُوْسٰى ۙ وَاِنِّىْ لَاَظُنُّهٗ مِنَ الْـكٰذِبِيْنَ‏ 

இன்னும் ஃபிர்அவ்ன் சொன்னான்: “பிரமுகர்களே! என்னைத்தவிர உங்களுக்கு வேறெரு நாயன் இருக்கின்றான் என்பதாக நான் அறியவில்லை. ஆதலின், ஹாமானே! களிமண் மீது எனக்காகத் தீயைமூட்டி (செங்கற்கள் செய்து) பிறகு எனக்காக ஓர் (உயரமான) மாளிகையைக் கட்டுவாயாக! (அதன் மேல் ஏறி) நான் மூஸாவின் இறைவனைப் பார்க்க வேண்டும் – மேலும் நிச்சயமாக நான் இவரை பொய்யர்களில் நின்றுமுள்ளவர்” என்றே கருதுகின்றேன்.