التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات
அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள்
பாகம் – 21
- அல்லாஹ்வின் மற்ற பெயர்கள் அனைத்தும் சொல்லக்கூடிய மொத்தக்கருத்துக்களும் அல்லாஹ் என்ற பெயரில் உள்ளடங்கியுள்ளது
- அல்லாஹ்வின் பெயர்களில் ‘யா’ வைத்து அழைக்கும்போது ‘அல்’ போய்விடும்.
உதாரணம்:
அர்ரஹ்மான் எனும் பெயரை வைத்து நாம் துஆ செய்யும்போது யா ரஹ்மானே என்று துஆ செய்வோம்.
யா அல்லாஹ் என்று அழைக்கும்போது நிதா வின் ‘யா’ வந்து சேர்ந்தாலும் அல்லாஹ்வில் இடம்பெறும் ‘அல்’ நீங்காது.
- நாம் ஓதும் திக்ர் துஆக்கள் பெரும்பாலும் அல்லாஹ் என்ற பெயரிலேயே வரும்
- குர்ஆனில் அல்லாஹ் என்ற பெயர் ஏறத்தாழ 2200 முறைக்கும் மேலாக இடம்பெற்றிருக்கிறது.
- சுமார் 33 வசனங்கள் அல்லாஹ் என்ற பெயரைக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கன்றன.
- பெரும்பாலான அறிஞர்கள் கருத்துப்படி اسم الله الاعظم எனப்படும் பெயர் அல்லாஹ் என்ற பெயராகும்.
- عن أبي أمامة -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: (اسْمُ اللَّهِ الأَعظَمُ فِي سُوَرٍ مِنَ القُرآنِ ثَلَاثٍ: فِي البَقَرَةِ وَآلِ عِمرَانَ وَطَهَ).
அபூஉமாமா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ்வின் மகத்தான அந்த பெயர் குர்ஆனில் 3 சூராக்களில் இடம்பெற்றிருக்கிறது.அது சூரத்துல் பகரா, ஆலு இம்ரான், மற்றும் தாஹா (இப்னு மாஜா 3856 ஹசன்)
⭐ அனஸ் (ரலி) – நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது ஒரு மனிதன் தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் துஆ கேட்கையில்
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لك الْمَنَّانُ بَدِيعَ السَّمَوَاتِ وَالأَرْضِ، يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ، إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ
யா அல்லாஹ்! நான் உன்னிடம் கேட்கிறேன், எல்லாப்புகழும் உனக்கே உரியது உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் வேறில்லை, நீ கொடுப்பவன், வானங்களையும் பூமியையும் முன்னுதாரணமின்றி படைத்தவன், கண்ணியமும் மகத்துவமும் பொருந்தியவன், என்றென்றும் உயிரோடிருப்பவனே, என துஆ செய்தபோது
நபி (ஸல்) அவர்கள்
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ دَعَا اللَّهَ بِاسْمِهِ الْعَظِيمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ ، وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَ
அந்த பெயரைக்கொண்டு பிரார்த்தித்தால் அல்லாஹ் உடனடியாக பதில் கொடுக்கிறான்.
இந்த பெயரைக்கொண்டு கேட்டால் அல்லாஹ் உடனடியாக அதை அவருக்கு கொடுக்கிறான்.(திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா)
இதன் மூலம் அல்லாஹ்வின் திருநாமங்களை கொண்டு துஆ கேட்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்தார்கள்.
⭐ சிலர்
اللهم اني اسالك باسمائك الحسنى وصفاتك العليا
யா அல்லாஹ் உன்னுடைய அனைத்து திருநாமங்களையும் கொண்டு உன்னிடம் நான் கேட்டறிகிறேன் மேலும் உன்னுடைய அனைத்து பண்புகளையும் கொண்டு உன்னிடம் கேட்கிறேன்
என பிரார்த்திப்பார்கள்
⭐ அல்லது அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ப
உதாரணம் :-
அல்லாஹ்விடத்தில் பாவ மன்னிப்பு கேட்கும்போது அவனது மன்னிக்கும் பண்பை குறிக்கும் பெயர்களை மனமார கூறி மன்னிப்பு கேட்டல் சிறந்ததாகும்.
⭐ அனைத்து பெயர்களையும் விட அல்லாஹ்வின் இஸ்முல் அஹ்ழம் ஆன பெயர்களைச்சொல்லி கேட்பது சிறந்தது.
கருத்துரைகள் (Comments)