ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 23

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات 

அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள் 

பாகம் – 23

புத்தக ஆசிரியர் அல்லாஹ் என்ற பெயரின் சிறப்பை இது வரை விளக்கினார்கள். இப்போது அல்லாஹ் என்ற பெயரின் கருத்தை விளக்குகிறார்கள். 

இதன் அடிப்படை பெயர் ال اله என்பதாகும். ஆகவே ال اله என்பதும் அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாகும். 

ஆதாரம் :

ஸூரத்துல் பகரா 2:163

وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ  ۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ

ஸூரத்துத் தவ்பா 9:31

…وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا‌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ ؕ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ‏

ஸூரத்துல் அன்பியா 21:108

قُلْ اِنَّمَا يُوْحٰۤى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَهَلْ اَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

அல்லாஹ் என்ற வார்த்தையின் அர்த்தம் 

عن ابن عباس قال: الله ذو الألوهية والعبودية على خلقه أجمعين، 

இப்னு அப்பாஸ் (ரலி) – தன்னுடைய அனைத்து படைப்புகளும் வணங்கத்தகுதியானவனும்  அனைத்து படைப்புகளும் அவனுக்கே 

அடிபணிந்து இருக்கின்றன.(தப்ஸீர் தபரீ)
அல்லாஹ் என்ற பெயரில் இருக்கும் கருத்து:

அல்லாஹ் தான் வணங்கி வழிபடத்தகுதியானவன் 

படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் அடிமைகள் 

அல்லாஹ் என்ற பெயரை புரிந்து கொண்ட ஒரு முஃமின் கண்ணியமானவனாக இருப்பான்.

ஸூரத்துல் அன்ஃபால் 8:2

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ۖ 

உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

அல்லாஹ் என்ற வார்த்தைக்கு பொருள் அறிந்தால் தான் அவனது கண்ணியம் புரிந்தால் தான் அவனது பெயர் சொல்லப்பட்டால் உள்ளம் நடுங்கும். 

அல்லாஹ் என்ற பெயரை புரிந்தவன் அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் வணங்கவே மாட்டான், எவருக்கும் பலி அறுக்க மாட்டான்

لا اله الا الله

இதில் அல்லாஹ்வின் 2 பெயர்கள் உள்ளன. அல்லாஹ்வின் பெயரைப்புரிந்தவன் அல்லாஹ்வை தவிர வேறெதனையும் வணங்கவே மாட்டான். 

 شَيْخُ الْإِسْلَامِ ابْنُ تَيْمِيَّةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى: الْعِبَادَةُ هِيَ اسْمٌ جَامِعٌ لِكُلِّ مَا يُحِبُّهُ اللَّهُ تَعَالَى وَيَرْضَاهُ مِنَ الْأَقْوَالِ وَالْأَعْمَالِ الْبَاطِنَةِ وَالظَّاهِرَةِ

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) – அல்லாஹ் விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்ளார்ந்த வெளிப்படையான அனைத்து செயல்களும் வணக்கம் என்று கூறப்படும்.

வணக்கம் 2 வகைப்படும் 

  • உள்ளத்தால் செய்யக்கூடிய வணக்கம் (அல்லாஹ்வை அஞ்சுவது, அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பது, தவக்குல் வைப்பது, இக்லாஸ், தவக்குல், ஆதரவு வைப்பது, அல்லாஹ்வை அஞ்சுவது)
  • உடலால் செய்யக்கூடிய வணக்கம் (தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், நேர்ச்சை, குர்பானி, ஸதகா, குர்ஆன் ஓதுவது, நாவால், பணத்தால்…)

அல்லாஹ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தால் எந்த சூழலிலும் அவனுக்கு வேறெதையும் நாம் இணை வைக்கவே மாட்டோம் 

பிலால் (ரலி) சுடுமணலில் இட்டு வேதனை செய்யப்பட்டபோதும் அவரது வாயால் அஹத் அஹத் என்று தான் கூறினார்கள்.

ஹப்பாப் (ரலி) நெருப்பின்மீது கட்டித்தூக்கப்பட்டு அவரது உடலிலிருந்து கொழுப்பு கரைந்து வடிந்தபோதும் அல்லாஹ்விற்கு இணை வைக்கவில்லை 

யாசிர் (ரலி) இரண்டாக பிளக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டபோதும் இணைவைக்கவில்லை 

சுமையா (ரலி) பிறப்புறுப்பில் அம்பு எய்து கொல்லப்பட்டபோதும் இணைவைக்கவில்லை