ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா
(فقه الأسماء الحسنى)
பாகம் – 25
இந்த خَلْق என்ற வார்த்தைக்கு 2 அர்த்தங்கள்
- படைத்தல் (முன்னுதாரங்கங்கள் எதுவுமில்லாமல் புதிதாக ஒன்றை படைப்பது)
ஸூரத்து யாஸீன் 36:71
اَوَلَمْ يَرَوْا اَنَّا خَلَقْنَا لَهُمْ مِّمَّا عَمِلَتْ اَيْدِيْنَاۤ اَنْعَامًا فَهُمْ لَهَا مٰلِكُوْنَ
நிச்சயமாக நாம் அவர்களுக்காக நம்முடைய கைகள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்திருக்கின்றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் மீது அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள்.
ஸூரத்துல் கமர் 54:49
اِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
ஸூரத்துல் அஃலா 87: 2, 3
87:2 الَّذِىْ خَلَقَ فَسَوّٰى
அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
87:3 وَالَّذِىْ قَدَّرَ فَهَدٰى
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
ஸூரத்துல் ஃபுர்ஃகான் 25:2
وَخَلَقَ كُلَّ شَىْءٍ فَقَدَّرَهٗ تَقْدِيْرًا
…… அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்
ஸூரத்துல் அன்பியா 21:104
…. كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ ؕ وَعْدًا عَلَيْنَا ؕ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ
………… முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமக நாம் இதனை செய்வோம்.
⭐ மேற்கூறப்பட்ட வசனங்களில் خَلْقٍ என்ற சொல்லுக்கு முன்னுதாரணங்கள் இல்லாமல் படைத்தல் என்ற கருத்து இடம்பெறுகிறது.
கருத்துரைகள் (Comments)