ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 37

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 37

வழிகெட்ட கொள்கைகளில் ஒன்று 

وحدت الوجود அனைத்தும் அல்லாஹ் தான் எனும் கருத்து 

இயல்வது யாவும் இறை உருவே

அனைத்தும் அல்லாஹ்வின் தோற்றமே 

ஸூரத்துல் ஹதீத் 57:3

هُوَ الْاَوَّلُ وَالْاٰخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ‌ۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே; பிந்தியவனும் அவனே; பகிரங்கமானவனும் அவனே; அந்தரங்கமானவனும் அவனே; மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.

இந்த வசனத்தில் الظَّاهِرُ என்ற வார்த்தைக்கு  வெளிப்படை என்ற அர்த்தமிருப்பதால், அல்லாஹ்வின் வெளிப்பாடு தான் பிரபஞ்சத்தின் அனைத்தும் என்ற கருத்தை இட்டுக்கட்டி மக்களை வழிகெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அல்லாஹ் எங்குமிருப்பான், தூணிலுமிருப்பான்  துரும்பிலும் இருப்பான் என்றெல்லாம் கூறுவது மிகவும் தவறான வழிகேடான கொள்கையாகும். இவ்வாறான கொள்கை ஒரு மனிதனை இஸ்லாத்தை விட்டும் வெளியே கொண்டு சென்றுவிடும். 

الظَّاهِرُ என்ற வார்த்தைக்கு  நபி (ஸல்) கற்றுத்தந்த விளக்கத்தில் அல்லாஹ் உயர்ந்தவன் அவனுக்கு மேலாக வேறெதுவும் கிடையாது என்று கூறினார்கள்.