ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா
(فقه الأسماء الحسنى)
பாகம் – 38
அல்லாஹ் எங்கே இருக்கிறான்?
- முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருந்தாள். அவள் என் ஆட்டு மந்தையை (மதீனாவிற்கு அருகிலுள்ள) உஹுத் மலை மற்றும் (அதையொட்டி அமைந்துள்ள) ஜவ்வானிய்யாப் பகுதியில் மேய்த்துவந்தாள். ஒரு நாள் நான் சென்று பார்த்தபோது ஓநாய் ஒன்று அவளிடமிருந்த ஆடுகளில் ஒன்றைக் கொண்டு சென்றுவிட்டது. (சராசரி) மனிதன் கோபப்படுவதைப் போன்று நானும் கோபப்பட்டேன். ஆயினும், அவளை நான் அறைந்துவிட்டேன். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது அது குறித்து அவர்கள் என்னைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.
⭐ நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவளை விடுதலை செய்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அந்தப் பெண்ணை என்னிடம் அழைத்துவாருங்கள்!” என்று சொன்னார்கள். நான் அவளை அழைத்துச் சென்றபோது அவளிடம், “அல்லாஹ் எங்கே இருக்கின்றான்?” என்று நபியவர்கள் கேட்டார்கள். அவள், “வானத்தில்” என்று பதிலளித்தாள். அவர்கள், “நான் யார்?” என்று கேட்டார்கள். அவள், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர்” என்றாள். அவர்கள் (என்னிடம்), “அவளை விடுதலை செய்துவிடுங்கள்! ஏனெனில், அவள் இறைநம்பிக்கையுடைய (முஃமினான) பெண் ஆவாள்” என்றார்கள்.
⭐ இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Book :5 ஸஹீஹ் முஸ்லீம்
கருத்துரைகள் (Comments)