ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 04

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 4

இமாம் இப்னுல் கய்யிம் தொடர்ந்து கூறுகையில் :-

அமல்கள் எனும் கட்டடத்தை கட்டும் அடிப்படை மனித உடலில் உள்ள பலத்தை போன்றது. உடல் பலமாக இருந்தால் அனைத்து நோய்களிலிருந்தும் தீக்காயங்களிலிருந்தும் தன்னை அது தடுத்துக்கொள்ளும். அதேசமயம் மனிதனின் உடல் பலஹீனமானதாக இருந்தால் நோய்களை சுமப்பது  சிரமமாவதோடு மட்டுமல்லாமல் எளிதில் நோயுற்று விடும் நிலைக்கு அந்த உடல் தள்ளப்படும்.

🌷 எனவே உம்முடைய கட்டடத்தை ஈமானின் அஸ்திவாரத்தில் கட்டி எழுப்புவீராக. அப்போது உன்னுடைய அமல்கள் கூடிக்கொண்டு போகும் இடையில் ஏதேனும் இடையூறுகள் வந்தாலும் அதை சீர் செய்ய உன்னால் முடியும்.

அஸ்திவாரத்தில் 2 முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும்:-

الأول: صحة المعرفة بالله وأمره وأسمائه وصفاته.

 அல்லாஹ்வை அறிந்து கொள்வது, அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் அறிந்து கொள்வது.

والثاني: تجريد الانقياد له ولرسوله دون ما سواه.

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்படுவது.

🌷 அல்லாஹ் இருக்கிறான் என்பது உலகில் அனைவரும் அறிந்ததே. ஆனால் அல்லாஹ் எப்படிப்பட்டவன் என்பதை ஒரு முஸ்லீம் அறிந்திருக்க வேண்டும்

ஸூரத்துஜ்ஜுமர் 39:67

وَمَا قَدَرُوْا اللّٰهَ حَقَّ قَدْرِهٖ ‌ۖ

அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை