ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 42

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 42

الهادى வழிகாட்டுபவன் 

புத்தக ஆசிரியர் கருத்து :- தன்னுடைய அடியார்களுக்கு இம்மை மறுமை வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும்  வழிகாட்டுபவன். மேலும் தன்னுடைய நேசர்கள் அவனை வழிபடுவதற்கும் அவனுடைய திருப்தியை பெற்றுக்கொள்வதற்கு வழிகாட்டுபவன். மிருகங்களாலும் தேவயானவற்றுக்கு வழிகாட்டுபவன் 

ஸூரத்துல் ஹஜ் 22:54

وَاِنَّ اللّٰهَ لَهَادِ الَّذِيْنَ اٰمَنُوْۤا اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

…..மேலும்: திடனாக அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை நேரான வழியில் செலுத்துபவனாக இருக்கின்றான்.

ஸூரத்துல் ஃபுர்ஃகான் 25:31

وَكَفٰى بِرَبِّكَ هَادِيًا وَّنَصِيْرًا‏

….இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.

ஹிதாயத்தை அறிஞர்கள் பல வகையாக வகைப்படுத்துகிறார்கள் 

1 -الهداية العامة(பொதுவான ஹிதாயத்)

ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதற்கு தேவையான விஷயங்களையும் வழிகளையும் காட்டுவது.

ஸூரத்துல் அன்ஆம் 6:38 , 39

  وَمَا مِنْ دَآبَّةٍ فِى الْاَرْضِ وَلَا طٰۤٮِٕرٍ يَّطِيْرُ بِجَنَاحَيْهِ اِلَّاۤ اُمَمٌ اَمْثَالُـكُمْ‌ؕ مَا فَرَّطْنَا فِى الْـكِتٰبِ مِنْ شَىْءٍ‌ ثُمَّ اِلٰى رَبِّهِمْ يُحْشَرُوْنَ‏

பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும்.

 وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا صُمٌّ وَّبُكْمٌ فِى الظُّلُمٰتِ‌ؕ مَنْ يَّشَاِ اللّٰهُ يُضْلِلْهُ ؕ وَمَنْ يَّشَاْ يَجْعَلْهُ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏

நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.