ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 05

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா (فقه الأسماء الحسنى) 

பாகம் – 5

அல்லாஹ்வை அறிவது ஒரு முஸ்லிமிற்கு கடமை என்பதை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் குர்ஆனில் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் சில கீழ்வருமாறு:-

ஸூரத்துல் பகரா 2 : 209; 231; 233; 235; 244; 267

  • 209فَاعْلَمُوا أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

…நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்; பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • 231….وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

…நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • 233وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏

 நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • 235 وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ

…. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • 244 وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ سَمِيْعٌ عَلِيْمٌ‏

நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

  • 267 .. وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَنِىٌّ حَمِيْدٌ‏

நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்

ஸூரத்துல் மாயிதா 5 : 98 

  • اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ؕ‏

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடுமையானவன்; மேலும். நிச்சயமாக அல்லாஹ் (மிகவும்) மன்னிப்போனும், பெருங்கருணையாளனுமாவான்,

ஸூரத்துல் அன்ஃபால் 8 : 40

  •  …فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَوْلٰٮكُمْ‌ؕ نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ‏

…நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் – அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்.

ஸூரத்துல் பகரா 2: 194; 235

  • 194 وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ مَعَ الْمُتَّقِيْنَ‏

…… நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • 235 … ‌ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِىْٓ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ‌ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ‏

…..  அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ஸூரத்து முஹம்மது 47 : 19

  • فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக……

🌹 அல்லாஹ்வை அறிந்தால் அவனது பெயர் கூறப்பட்டால் உள்ளம் நடுங்கும்.

 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ‌‌ۖ ‌ۚ‏

உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.

🌹 அல்லாஹ்வுடைய பெயர்களும் பண்புகளும் குர்ஆனில் அதிகமாக இடம்பெற்றிருக்கிறது. குர்ஆனில் சொல்லப்பட்ட மிகச்சிறந்ததும் உயர்ந்ததுமான விஷயம் அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும் தான். அதை குர்ஆனிலுள்ள வேறெதனுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு மேன்மையானதாக இருக்கிறது.