அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 123

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 123

நபித்தோழர்களை நேசித்தல் அவர்களது சிறப்பை ஏற்றல் இமாம்களுடைய கண்ணியத்தை ஏற்றல் ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படுத்தல் என்பவற்றை நம்புவது

ஒரு முஸ்லீம் நபித்தோழர்களை நேசித்தல் வாஜிப் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும்.

قال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا بعدي

فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم ومن آذاهم فقد آذاني

ومن آذاني فقد آذى الله عز وجل ومن آذى الله يوشك أن يأخذه

நபி (ஸல்) யார் அன்சாரிகளை விரும்புகிறார்களோ எனது நேசத்தின் காரணமாகவே அவர்கள் விரும்புகிறார்கள். யார் அவர்களை பகைக்கிறார்களோ எனது பகைமையின் காரணத்தினாலேயே பகைக்கிறார்கள். (அஹ்மத்)

حبهم ايمان وبغضهم نفاق

♦️️நபி (ஸல்) – அன்சாரிகளை நேசிப்பது ஈமானாகும் அவர்களை பகைப்பது நயவஞ்சகமாகும்.(புஹாரி, முஸ்லீம்)

♦️நபியவர்களின் குடும்பத்தினரை நேசித்தல்.

♦️இது நபி (ஸல்) வை நேசிப்பதின் வெளிப்பாடாகும்.

♦️நபித்தோழர்கள் நம்மை விட சிறந்தவர்கள் என ஏற்றுக்கொள்ளுதல்.

♦️நபித்தோழர்கள் சிலர் சிலரை விட தரத்தில் உயர்ந்தவர்களாக இருந்தார்கள்.