அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 38
- மலக்குமார்கள் இருக்கிறார்கள் என நாம் நம்புகிறோம்.
- மலக்குமார்களுக்கு பெயர்கள் உண்டு என நம்புகிறோம்.
- மலக்குமார்கள் பெயர்களில் சிலவற்றை நாம் ஆதாரபூர்வமாக அறிகிறோம் உதாரணம் ஜிப்ரஈல், மீகாயீல், ….
- மலக்குமார்கள் பெயர்களில் ஆதாரமற்ற பெயர்களும் நம்பப்பட்டு வருகிறது.
عن الزهري أخبرني ابن أبي نملة الأنصاري عن أبيه أنه بينما هو جالس عند
رسول الله صلى الله عليه وسلم وعنده رجل من اليهود مر بجنازة فقال يا محمد
هل تتكلم هذه الجنازة فقال النبي صلى الله عليه وسلم الله أعلم فقال اليهودي إنها
تتكلم فقال رسول الله صلى الله عليه وسلم ما حدثكم أهل الكتاب فلا تصدقوهم ولا
تكذبوهم وقولوا آمنا بالله ورسله فإن كان باطلا لم تصدقوه وإن كان حقا لم
تكذبوه
நபி (ஸல்) விடம் ஒரு யூதர் ஜனாஸா(மண்ணறையில் முன்கர் நகீர்; என்கின்ற மலக்குமார்களுடன்) பேசுமா என்றார்கள் அதற்கு நபியவர்கள் அல்லாஹ்வே அறிந்தவன் என்றபோது ஜனாஸா(முன்கர் நகீருடன்) பேசும் என்று அவர் கூறினார் அப்போது நபி (ஸல்) வேதக்காரர்கள் உங்களிடம் ஒரு விஷயத்தை சொன்னால் அதை நீங்கள் பொய்ப்படுத்தவும் வேண்டாம் உண்மைப்படுத்தவும் வேண்டாம். நாங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்புகிறோம் என்று கூறுங்கள் ஏனெனில் அவர்கள் கூறுவது உண்மையாயின் அதை பொய்ப்படுத்தக்கூடும் அவர்கள் கூறுவது பொய்யாயின் நீங்கள் அதை உண்மைப்படுத்த கூடும்.
عبد الله بن عمرو أن النبي صلى الله عليه وسلم قال بلغوا عني ولو آية وحدثوا
عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار
இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – இஸ்ராயீலர்களிடமிருந்து வரும் செய்திகளை அறிவியுங்கள் அதில் தவறில்லை (ஆனால் அதில் உண்மையுமிருக்கலாம் பொய்யுமிருக்கலாம் ஆகவே நாம் அதை முழுமையாக நம்பி கூறாமல் இருப்பதே சிறந்தது)
கருத்துரைகள் (Comments)