அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 82

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 82

💠 ஸூரத்துல் அன்ஆம்6:148

(அல்லாஹ்வுக்கு இணை வைக்கும்) முஷ்ரிக்குகள் “அல்லாஹ் நாடியிருந்தால், நாங்களும் எங்கள் மூதாதையர்களும் இணை வைத்திருக்க மாட்டோம்; நாங்கள் எந்தப் பொருளையும் (எங்கள் விருப்பப்படி) ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்” என்று கூறுவார்கள் – இப்படித்தான் இவர்களுக்கு முன் இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக் கொண்டிருந்தார்கள்; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம் ஏதாவது ஆதாரம் உண்டா? இருந்தால் அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்; (உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள் பொய் வாதமே புரிகின்றீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.

💠 ஸூரத்துல்ஆல இம்ரான் 3:168

(போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி: “அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள் (பார்ப்போம் என்று).