அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 105

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 105

❤ சூரா அல் அன்ஆம் 6:128

وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا‌ ۚ يٰمَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِّنَ الْاِنْسِ‌ۚ وَقَالَ اَوْلِيٰٓـئُهُمْ مِّنَ

الْاِنْسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَّبَلَغْنَاۤ اَجَلَـنَا الَّذِىْۤ اَجَّلْتَ لَـنَا‌‌ ؕ قَالَ النَّارُ مَثْوٰٮكُمْ

خٰلِدِيْنَ فِيْهَاۤ اِلَّا مَا شَآءَ اللّٰهُؕ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ

(128) அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) “ஓ! ஜின்களின் கூட்டத்தாரே!

நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?” என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்: “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவணையை நாங்கள் அடைந்து விட்டோம்” என்று கூறுவார்கள்; அதற்கு அவன், “நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் – அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் – நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.