அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 108

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 108

6213ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சோதிடர்கள் குறித்துச் சிலர் கேட்டனர். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘சோதிடர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருளே அல்ல’ என்று பதிலளித்தார்கள். அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! அவ்வாறாயின், சோதிடர்கள் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி அறிவிக்க அது உண்மையாகி விடுகிறதே (அது எப்படி?)’ என்று வினவினர். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அந்த உண்மையான வார்த்தைகளை ஜின் (வானவரிடமிருந்து) ஒட்டுக் கேட்டு வந்து தம் (சோதிட) நண்பனின் காதில் சேவல் கொக்கரிப்பது போல் போட்டு விடுகிறது. சோதிடர்கள் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்து விடுகின்றனர்’ என்று கூறினார்கள்.244

Volume :6 Book :78 புஹாரி

❤ சூரா அல் ஜின் 72:8

وَّاَنَّا لَمَسْنَا السَّمَآءَ فَوَجَدْنٰهَا مُلِئَتْ حَرَسًا شَدِيْدًا وَّشُهُبًا ۙ‏

“நிச்சயமாக நாம் வானத்தைத் தொட்டுப் பார்த்தோம். அது கடுமையான காவலாளிகளாலும், தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதை, நாங்கள் கண்டோம்.