உசூலுல் ஹதீஸ் பாகம் 25

உசூலுல் ஹதீஸ்

பாகம்-25

Audio Player

🌷 அதற்கு பிறகு யஸீத் இப்னு முஆவியா அவர்களும் மரணித்தபோது. அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) தன்னைத்தானே கலீஃபாவாக அறிவித்தார்கள், சிலர் அதற்கு உடன்பட்டாலும் ஷாமிற்கு சென்ற சிலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை பிறகு மர்வான் என்பவர் கலீஃபா வாகினார்கள். பிறகு இராக்கில் நாஃபிஹ் இப்னு ஹஜ்ரத் என்ற ஹவாரிஜின் தலைமையிலும் யமாமாவில் நஜ்தா இப்னு ஆமிர் என்பவன் தலைமையின் கீழும் ஒன்று சேர்ந்து மேலும் ஒரு படி கொள்கையில் மாற்றம் செய்து ஹவாரிஜ் கொள்கையை நம்பியவராக இருப்பினும் யுத்தம் செய்ய வராதவர்களுக்கு காஃபிர்கள் தான் என்று அறிவித்தார்கள்.  

🌷 காஃபிர்களை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை முஸ்லிம்களை மட்டுமே அடிமைப்படுத்தினார்கள், கொள்ளையடித்தார்கள், கொன்றுகுவித்தார்கள் இவ்வாறு அநியாயம் செய்தார்கள்.

🌷 மொராக்கோ பகுதியில் அல்ஜீரியா போன்ற பகுதிகளில் ஹவாரிஜ் கொள்கையை பரப்பினார்கள்

🌷 ஹதீஸ் கலையில் மிகவும் முக்கியமான விஷயம் ஹதீஸை அறிவிப்பவர் العدول(நன்னடத்தை) உள்ளவராக இருக்க வேண்டும். இந்த ஹவாரிஜுகள் அலீ (ரலி) யையும் மற்ற பிற சஹாபாக்களையும் தடம்புரண்டவர்கள் என்ற கருத்தில் இருப்பதால் அவர்களுடைய ஹதீஸுகளையெல்லாம் நிராகரித்தனர். ஆகவே தான் ஹவாரிஜுகளை பித்அத் காரர்கள் என்ற சட்டத்திற்குள் அடங்குகின்றனர். ஆகவே தான் பித்அத் காரர்களின் ஹதீஸுகளை எடுப்பதா நிராகரிப்பதா என்ற விஷயங்களில் அறிஞர்களுக்கு மத்தியில் சர்ச்சைகள் ஏற்பட்டன.