கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள் 04

حلية طالب العلم

கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்

பாகம் – 3

5) வீணான காரியங்களை விட்டும் தவிர்த்திருக்க வேண்டும்

 ஸூரத்துல் முஃமினூன் 23:3

وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏ 

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
அதனால் நேரம் அதிகமாக கிடைக்கும்.

6) மிருதுவான குணம்

إن الله رفيق يحب الرفق ويعطى على الرفق ما لا يعطي على العنف وما لا يعطي على ما سواه

ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ் மிருதுவானவன் அவன் மிருதுவானதை விரும்புகிறான்.
அல்லாஹ் மூஸா அலை அவர்களிடம் ஃபிரௌனிடம் சொல்லச்சொன்னது

❤ ஸூரத்து தாஹா 20:44

فَقُوْلَا لَهٗ قَوْلًا لَّيِّنًا لَّعَلَّهٗ يَتَذَكَّرُ اَوْ يَخْشٰى‏

“நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.”

7) சமயோசித புத்தியோடு அமைதியாக சிந்தித்தல்(التامل)

العجلةمن الشيطان و التاني من الله

நபி (ஸல்) – வேகமாக செயல்படுவது ஷைத்தானின் தன்மையும் நிதானமாக செயல்படுவது அல்லாஹ் விரும்பும் தன்மையும் ஆகும்.

وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ

நபி (ஸல்) – யார் அல்லாவையும் மறுமையையும் நம்புகிறாரோ அவர் நல்லதை பேசட்டும் இல்லையேல் மெளனமாக இருக்கட்டும் .

8) الثبات والتثبت எந்த ஒரு செய்தியும் ஆதரத்தன்மையை ஆராய வேண்டும்

احب الاعمال الى الله ادومها وان قل

நபி (ஸல்) – அல்லாஹ்விற்கு மிகப்பிடித்தமான அமல் தொடர்ந்து செய்யும் அமல்களே.