சஜ்தா திலாவத் 03

  ஃபிக்ஹ்

சஜ்தா திலாவத்

பாகம் – 3

وأخرج البخاري بسنده عن عمر بن الخطاب رضي الله عنه أنه قرأ يوم الجمعة على المنبر

سورة النحل حتى إذا جاء السجدة نزل فسجد وسجد الناس ، حتى إذا كانت الجمعة القابلة

قرأ بها  

(الجزء رقم : 71، الصفحة رقم: 122) 

உமர் (ரலி) ஒரு முறை ஜும்மாவில் சூரத்துன் நஹ்ல் ஓதி ஸுஜூது செய்தார்கள் அடுத்த வாரம் அதே சூராவை ஓதிவிட்டு ஸஜ்தா செய்யவில்லை பிறகு இந்த சஜ்தா சஹு கட்டாயமானதல்ல என்று அறிவுரை செய்தார்கள்.  (புஹாரி) 

💠 ஸைத் இப்னு ஸாமித் (ரலி) – நபி (ஸல்) அவர்களுக்கு சூரத்து நஜ்மை நான் ஓதினேன் அப்போது நபியவர்கள் ஸஜ்தா வின் ஆயத் வந்தபோது ஸுஜூத் செய்யவில்லை.(புஹாரி,முஸ்லீம் )இந்த ஹதீஸின் மூலம் ஸஜ்தா சஹு  கட்டாயமானதல்ல சுன்னத்தானது என்று புரிந்து கொள்ள முடிகிறது.தாரகுத்னீ யில் வரக்கூடிய ஹதீஸில் எண்களில் யாரும் ஸுஜூது செய்யவில்லை என்று இடம்பெறுகிறது.இந்த செய்தியை இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் விளக்கம் கொடுக்கையில் சஜ்தா செய்யாமல் இருப்பதற்கும் அனுமதி இருக்கிறது என்று காட்டுவதற்காகவே நபி (ஸல்) ஸுஜூது செய்யாமலிருந்தார்கள் என்று விளக்கினார்கள்.