சுன்னத்தான தொழுகைகள் 06

சுன்னதான தொழுகைகள்

பாகம் – 6

இஷாவிற்கு முன்னால் 2

بين كل أذانين صلاة، بين كل أذانين صلاة” ثم قال في الثالثة” لمن شاء

அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) – நபி (ஸல்) – ஒவ்வொரு இரண்டு பாங்குகளுக்கும் மத்தியில் தொழுகை இருக்கிறது என இரண்டு முறை கூறினார்கள் மூன்றாவது முறை விரும்பியவர்கள் தொழலாம் என கூறினார்கள்.(புஹாரி)

சுருக்கமாக சொன்னால் 

💠 5 கடமையான தொழுகைகளுக்கும் முன் சுன்னத் இருக்கிறது.

💠 அஸருக்கும் ஃபஜ்ருக்கும் பின் சுன்னத் இல்லை

💠 ஒரு சுன்னத் விடுபட்டுவிட்டால் மற்ற தொழுகையின் நேரங்களில் அதை தொழலாம். தொழுகை தடை செய்யப்பட்ட நேரத்தை தவிர.

💠 நபி (ஸல்) – ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு மிக நெருக்கமாக இடம் ஸுஜூது தான்.

💠 நபி (ஸல்) – அத்தஹிய்யாத்தில் ஸலாமிற்கு முன்னால் நீங்கள் விரும்பியதை கேளுங்கள் அல்லாஹ்விடம்

நேரங்களில் சிறந்த நேரம் 

❤ இரவின் கடைசி பகுதியில் தஹஜ்ஜத்தில் கேட்கலாம் 

அல்லாஹ் முதல் வானத்திற்கு வந்து என்னிடம் கேட்பவர்கள் உண்டா என கேட்கும் நேரம்