ஜமாஅத் தொழுகை 13

ஜமாஅத் தொழுகை

பாகம்-13

இமாமுக்கு தொழுகையை விடக்கூடிய நிலை ஏற்பட்டால் 

அவ்வாறான சூழல்களில் இமாம் விட்ட இடத்திலிருந்து தன்னுடைய தொழுகையை தொடர வேண்டும்.

அம்ரு இப்னு மைமூன் (ரலி) – உமர் (ரலி) சுபுஹ் தொழுகையை தொழுவித்து கொண்டு இருக்கும் போது அபூலூலு அல் மஜூசி என்ற நெருப்பு வணங்கி இரண்டு முனைகளும் கூராக உள்ள கத்தி  யைக் கொண்டு உமர் (ரலி) அவர்களை குத்தி கொன்றான்.அப்போது எனக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையே அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தான் இருந்தார்கள். அப்போது உமர் (ரலி) கோபத்திலே “என்னை ஒருவன் கொன்றுவிட்டான்” அல்லது, “என்னை ஒரு நாய் கடித்துவிட்டது” என்று கூறி அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)கையை பிடித்து இமாமாக்கி தொழுகை நடத்த வைத்தார்கள்.

இந்த ஹதீஸிலிருந்து நமக்கு தெரியவேண்டிய சட்டம் :

ஒரு இமாமிற்கு தொழுகையை முழுமைப்படுத்த முடியாத நிலையிலே, பின்னால் இருப்பவர்கள் முன்னால் சென்று அந்த தொழுகையை முழுமைப்படுத்த வேண்டும். 

لِيَلِنِي مِنْكُمْ أُولُو الْأَحْلَامِ وَالنُّهَى 

நபி (ஸல்) – எனக்குபிறகு அறிவுள்ளவர்கள் நிற்கட்டும்.

இமாமிற்கு தொழுகையை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்றால், அதை அவர்களுக்கு பின்னாலிருப்பவர்கள் இமாம் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அந்த தொழுகையை நிறைவேற்றலாம்