ஜமாஅத் தொழுகை
பாகம்-15
كان رسول الله صلى الله عليه وسلم يسوينا في الصفوف كما يقوم القدح حتى إذا ظن أن قد أخذنا عنه ذلك
وفقهنا أقبل ذات يوم بوجهه إذا رجل منتبذ بصدره فقال : لتسون صفوفكم أو ليخالفن الله بين وجوهكم
❣ நுஃமான் இப்னு பஷீர் (ரலி)- நபி(ஸல்)அம்பை கூர்மைப்படுத்துவது போன்று எங்கள் சஃப்-களை நேர்மைப்படுத்துவார்கள். வரிசைகள் நேராகிவிட்டது என்று விளங்கிக்கொண்டால் நபி (ஸல்) தொழுகையை ஆரம்பிப்பார்கள். ஒருமுறை ஒருவர் மற்றவர்களின் நெஞ்சைவிட தன் நெஞ்சை முன்னால் வரும்படி வரிசையில் நின்றுகொண்டிருந்தார் அப்போது (ஸல்) அவர்கள் கோபப்பட்டு ” உங்களுடைய சஃப்-களை நீங்கள் நேர்மையாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அல்லாஹ் உங்களுக்கு மத்தியில் முரண்பட்ட கருத்துகள் உருவாக்கிவிடுவான். உங்கள் சஃப்-களில் நீங்கள் முரண்படுவது உங்கள் வாழ்க்கையிலே அது பிரதிபளிக்கிறது. “
(ஸுனன், முஸ்னத் அஹ்மத்)
❣ அபு உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நபி(ஸல்) அவர்கள் உங்களுடைய சகோதரர்களிடம் மிருதுவாக நடந்துகொள்ளுங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்குமிடையில் இடைவெளி விடாதீர்கள் (அஹ்மத், தபராணீ )
❣ நபி (ஸல்) முதல் வரிசையை முழுமைப்படுத்துங்கள் பிறகு அடுத்தடுத்த வரிசைகளை முழுமை படுத்துங்கள்(பைஹகீ)
கருத்துரைகள் (Comments)