தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 15
❤வசனம் 12:
لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ
அதை கேட்காமல் இருந்திருந்தால் ↔ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ
எண்ணினால் ↔ ظَنَّ
முஃமினான ஆண்கள் ↔ لْمُؤْمِنُوْنَ
முஃமினான பெண்கள் ↔ وَالْمُؤْمِنٰتُ
தங்களை↔ بِاَنْفُسِهِمْ
நன்மை ↔ خَيْرًاۙ
அவர்கள் கூறினார்கள் ↔ وَّقَالُوْا
இது பகிரங்கமான வீண் பழியாகும் ↔ هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ
➥ முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் – இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?
உலமாக்களின் கருத்து :
✿ புறம் பேசுவதும் கோள்மூட்டுவதும் அதை கேட்பதும் ஹராம்.
✿ தபூக் யுத்தத்தின் நேரத்தில் – நபி(ஸல்) – கஃஹப் இப்னு மாலிக் (ரலி) எங்கே? – ஒருவர் – அவருக்கு உலக ஆசை வந்துவிட்டது அதனால் தான் யுத்தத்திற்கு வரவில்லை – வேறொரு ஸஹாபி – கஃஹப் (ரலி) அல்லாஹ்வையும் அவருடைய தூதரையும் விரும்பக்கூடியவர் என்கிறார்.
தஃப்ஸீர் ஆசிரியர் கூறுகிறார் :
அபூ அய்யூப் உம்மு அய்யூப் (ரலி) இருவரும் ஆயிஷா(ரலி) வின் இந்த செய்தியைப் பற்றி பேசும்போது கணவர் கூறினார் உன்னைப்பற்றி இப்படியொரு செய்தி பரப்பப்பட்டிருந்தால் உன் நிலை எப்படியிருக்கும் உண்மையில் நீ இப்படிப்பட்ட அசிங்கத்தை செய்திருப்பாயா? – நான் இப்படி செய்திருக்கவே மாட்டேன். உன்னை விட பலமடங்கு சிறந்த ஆயிஷா(ரலி) இதை செய்திருப்பாரா என்று கணவர் கேட்டார்.
கருத்துரைகள் (Comments)