தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 18

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 18

 வசனம் 14

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِىْ مَاۤ اَفَضْتُمْ فِيْهِ عَذَابٌ

عَظِيْمٌ‌ ۖ‌ ۚ‏

அல்லாஹ்வுடைய அருள் இல்லையென்றால் ↔ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ

மேலும் அவனுடைய அன்பும் ↔ وَرَحْمَتُهٗ

இம்மையில் ↔ الدُّنْيَا

மேலும் மறுமையில் ↔ وَالْاٰخِرَةِ

உங்களை தீண்டியிருக்கும் ↔ لَمَسَّكُمْ

நீங்கள் ஈடுபட்டிருந்த விஷயத்திலே ↔ فِىْ مَاۤ اَفَضْتُمْ فِيْهِ

கடினமான வேதனை   ↔ عَذَابٌ عَظِيْمٌ‌ ۖ‌ ۚ‏

   இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.

 நபி(ஸல்) – உங்களுடைய அமல்களால் நீங்கள் சொர்க்கம் செல்ல முடியாது. அல்லாஹ்வுடைய அன்பால் தான் செல்ல முடியும் – ஸஹாபாக்கள் உங்களுக்கும் யா ரசூலுல்லாஹ் ? ஆம் எனக்கும் இது தான் ஆனால் அல்லாஹ் அவனுடைய அன்பால் சூழ்ந்து கொண்டான்.

 நபி(ஸல்) – எந்த கண்ணும் காணாத எந்த காதும் கேட்காத எந்த உள்ளமும் கற்பனை செய்யாத இன்பங்கள் சொர்க்கத்தில் உள்ளன.

 அல்லாஹ்வை நேசிக்கும் உள்ளம் நமக்கு இருக்க வேண்டும்.