தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 22

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 22

 வசனம் 19

اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا

وَالْاٰخِرَةِ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏

எத்தகையவர்கள் – الَّذِيْنَ நிச்சயமாக – اِنَّ

அவர்கள் விரும்புகிறார்கள் – يُحِبُّوْنَ اَنْ

மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமென – تَشِيْعَ الْفَاحِشَةُ

ஈமான் கொண்டவர்கள் மத்தியில் – فِى الَّذِيْنَ اٰمَنُوْا

அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை – لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ

இம்மையிலும் மறுமையிலும் – فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ؕ

மேலும் அல்லாஹு அறிகிறான் – وَاللّٰهُ يَعْلَمُ

மேலும் நீங்கள் அறியமாட்டீர்கள் –وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ ‏

    எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.