தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 27
لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ
وَجَنِّبْالشَّيْطَانَ مَا رَزَقْتَنَا، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا
இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – உங்களில் ஒருவர் குடும்ப உறவில் ஈடுபட நினைத்தால்
بِسْمِ اللهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْـتَنَا
என்று கூறி விட்டு ஈடுபட்டால் அதில் பிறக்கும் குழந்தையை ஷைத்தான் ஒருபோதும் தீண்ட மாட்டான். (புஹாரி – 3283)
❀ நபி (ஸல்) – இந்த உலகத்தில் எந்த குழந்தை பிறந்தாலும் ஷைத்தான் அதை தீண்டுகிறான் அதனால் தான் குழந்தைகள் அழுது கொண்டு பிறக்கின்றன. ஈஸா(அலை) பிறந்தபோது அழவில்லை அல்லாஹ் பாதுகாத்தான். (புஹாரி)
❀ ஷைத்தானின் தீங்கில் மிக மோசமானது மனிதர்களின் உள்ளத்தில் அவன் ஏற்படுத்தும் ஊசலாட்டம் (சூரா நாஸ் )
கருத்துரைகள் (Comments)