தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 52

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 52

 வசனம் 31:

وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌

வெளிப்படுத்த வேண்டாம் – وَلَا يُبْدِيْنَ

அவர்களுடைய அலங்காரத்தை – زِيْنَتَهُنَّ

தவிர – اِلَّا

சாதாரணமாக வெளியில் தெரிபவற்றை தவிர – مَا ظَهَرَ مِنْهَا‌

 சாதரணமாக வெளியில் தெரிவது கருத்துக்கள் :

{ ஒரு பெண் இஸ்லாமிய ஆடை அணிந்த பின்னும் அவளுக்கு உள்ள அழகு }

சில அறிஞர்கள் – முகத்தையும் மணிக்கட்டு வரையுள்ள கைகளையும் அது குறிக்கும்.

சில அறிஞர்கள் – அவசியம் பெண்கள் முகத்தை மூட வேண்டும்.

சில அறிஞர்கள் – முகத்தை மறைத்தே ஆக வேண்டும் என்று உறுதியாக வாதிடுகின்றனர். சிலர் கட்டாயம் மறைத்தாக வேண்டும் என்ற தேவையில்லை என்கின்றனர். ஆனால் மறைக்கக் கூடாது என்று பேசுகின்றார்கள் அது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து அல்ல.

 பெண்கள் முகத்தை மறைத்தே ஆக வேண்டும் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ நேரடியாக வரவில்லை. ஆகவே தான் இதில் கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன.ஆகவே இது இஜ்திஹாதுடன் சம்பந்தப்பட்ட விஷயம்.

 பொதுவாக ஒரு பெண் முகத்தை திறப்பதனால் பித்னா உருவாக்கும் என்று இருந்தால் அவள் மறைப்பதே சிறந்ததாகும். மறைப்பதால் பித்னா உருவாகும் என்றிருந்தால் திறப்பதே சிறந்ததாகும்.

 ஆகவே முகத்தையும் மணிக்கட்டு வரையிலான கைகளையும் தவிர மற்ற அனைத்தும் மறைத்தே ஆக வேண்டியவை என்பதில் கருத்துவேறுபாடு இல்லை.