தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 63
❤ வசனம் 32 :
اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ
அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை வசதியுள்ளவர்களாக மாற்றுவான
முஃபஸ்ஸிர்களின் கருத்து :
அல்லாஹ் மன நிறைவை ஏற்படுத்துகிறான்
ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس
அபூஹுரைரா (ரலி) -நபி (ஸல்) – செல்வம் என்பது நிறைய பொருட்கள் வந்து சேருவதல்ல உண்மையான செல்வம் போதுமென்ற மனம் தான் (முஸ்லீம்)
💠 ஹலாலான மனைவி கிடைத்து விட்டால் மன நிறைவை அடைந்து விடுகிறான் அதை தான் இந்த வசனம் குறிக்கிறது என சிலரின் கருத்து
💠 பெரும்பாலான அறிஞர்கள் கூறுகிறார்கள் இதில் பொருளாதாரத்தை தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்று. ஆகவே ஏழைகளாக இருந்தால் திருமணம் முடித்தால் அல்லாஹ் தன்னுடைய நாட்டத்திற்கேற்றார் போல வசதியுள்ளவராக மாற்றுவான்.
கருத்துரைகள் (Comments)