தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 66
❤ வசனம் : 35
اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ – அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளியாக இருக்கிறான்.(ஆகவே அல்லாஹ் வானங்களையும் பூமியையும் பிரகாசிக்க செய்கிறான்)
இதை வசனத்தை வைத்து தான் இந்த சூராவிற்கு சூரா நூர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது
தஃப்ஸீர் ஆசிரியர்கள் கருத்து
இப்னு அப்பாஸ் (ரலி) – வானங்களிலுள்ளவர்களுக்கும் பூமியிலுள்ளவர்களுக்கும் வழிகாட்டக்கூடியவனாக அல்லாஹ் இருக்கிறான்.பெரும்பாலானவர்கள் அல்லாஹ் வானங்களையும் பூமியையும் பிரகாசிக்க செய்கிறான் என்ற கருத்தையே முன்வைகின்றார்கள்.
அப்துல் அஸீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் போன்றவர்களும் இந்த கருத்தை கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் ஒளி
இதை இரண்டாக பிரிக்கலாம்
(1) அல்லாஹ் படைத்த ஒளி
(2) அல்லாஹ்வினுடைய ஸிஃபத்தாக (பண்பாக) இருக்கும் ஒளி.
وعَنْ أَبِي ذَرٍّ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ رَأَيْتَ رَبَّكَ قَالَ نُورٌ أَنَّى أراه رواه مسلم ( الإيمان/261
அபூதர் (ரலி) – நபி (ஸல்) விடம் மிஹ்ராஜ் சென்ற போது நீங்கள் ரப்பை பார்த்தீர்களா? என்று கேட்டபோது அவன் ஒளியாயிற்றே எப்படி பார்ப்பது என்று பதிலளித்தார்கள்(முஸ்லீம்)
❤ சூரா அல் அஃராஃப் 7 : 143
அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார்…
⭕ ஆகவே அல்லாஹ்வுடைய சிஃபத்தாகவும் ஒளி இருக்கிறது அல்லாஹ்வுடைய படைப்பாகவும் ஒளி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்துரைகள் (Comments)