தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 77

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 77

❤ வசனம் : 41

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّيْرُ صٰٓفّٰتٍ‌ؕ

كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ‏

 நீர் பார்க்கவில்லையா ↔ اَلَمْ تَرَ 

 அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்வதை ↔ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ 

 எவர் வானங்களிலிருக்கிறாரோ மேலும் பூமியில் ↔ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ 

 வரிசையாக செல்லக்கூடிய பறப்பவைகள் ↔ وَالطَّيْرُ صٰٓفّٰتٍ‌ؕ 

 அனைத்தும் நிச்சயமாக அறிந்திருக்கின்றன ↔ كُلٌّ قَدْ عَلِمَ 

அவற்றின் தொழுகையையும் தஸ்பீஹயும் ↔ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗ‌ؕ

وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ ↔ ‏ 

அவர்கள் செய்யக்கூடியவற்றை அல்லாஹ் மிக அறியக்கூடியவனாக இருக்கிறான்.

மலக்குகளின் தஸ்பீஹ்

❤ சூரா அல் அன்பியா 21 : 20

يُسَبِّحُوْنَ الَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُوْنَ

இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

❤ சூரா ஹாமீம் ஸஜ்தா 41 : 38

فَاِنِ اسْتَكْبَرُوْا فَالَّذِيْنَ عِنْدَ رَبِّكَ يُسَبِّحُوْنَ لَهٗ بِالَّيْلِ وَالنَّهَارِ وَهُمْ لَا يَسْــٴَــمُوْنَ۩‏

ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள்; அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.

❤ சூரா அல் அன்பியா 21 : 79

இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன – இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.

மேலும் 13:13, 59:1

💠 அல்லாஹ்வுடைய படைப்புகள் அனைத்தும் தஸ்பீஹ் செய்கின்றன ஆனால் அதை எப்படி என்று நாம் அறிந்து கொள்ள முடியாது.

❤ சூரா பனீ இஸ்ராயீல் 17 : 44

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவர்களும் அவனைத் துதி செய்து கொண்டிருக்கின்றனர்; இன்னும் அவன் புகழைக் கொண்டு துதி செய்யாத பொருள் (எதுவும்) இல்லை. எனினும் அவற்றின் துதி செய்வதை நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள், நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாகவும், மிக மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.