தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 79
தஸ்பீஹ் செய்ய வேண்டிய சில சந்தர்ப்பங்கள்
💠 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – யாரொருவர் ஒவ்வொரு நாளும் 100 முறை سبحان الله وبحمده(சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் அது அழிந்து விடும்(புஹாரி, முஸ்லீம்)
கடல் நுரையளவு – சிறிய பாவங்களை குறிக்கும் மேலும் பெரும்பாவங்களை தவ்பா செய்தால் அல்லாஹ் நாடினால் மன்னிப்பான்.
💠 நபி (ஸல்) – யாரொருவர் காலையிலும் மாலையிலும் سبحان الله وبحمده என்று 100 முறை சொல்கிறாரோ மறுமையில் அவரை விட சிறந்தவர் யாரும் வர மாட்டார்கள் (முஸ்லீம்)
كَلِمَتَانِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ : سُبْحَانَ اللَّهِ
الْعَظِيمِ ، سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
💠 அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) –இரண்டு வார்த்தைகள் நாவிற்கு இலேசானது மீஸானில் எடை கூடியது, ரஹ்மானுக்கு மிக விருப்பமானது சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்(புஹாரி, முஸ்லீம்)
❤ சூரா அல் அஃராஃப் 7 : 8
فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
❤ சூரா அல்காரிஆ 101 :6, 7
فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ
(6) எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-
فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ
(7) அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.
💠 நபி (ஸல்) – ஒரு அடியான் ஒரு பாவத்தை நினைத்தால் அந்த பாவம் எழுதப்படாது அந்த பாவத்தை செய்யாமல் விட்டால் அது நன்மையாக்கப்படும்.அந்த பாவத்தை செய்தால் பாவத்தை மட்டும் எழுதப்பட்டும். நன்மையை நினைத்தால் நன்மையை செய்தது போல எழுதப்படும். நன்மையை செய்தால் பன்மடங்காக நன்மையை எழுதப்படும்.
கருத்துரைகள் (Comments)