தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 83

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 83

 வசனம் : 42

وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏

 வானங்களிலும் பூமியும்  அல்லாஹ்விற்கே சொந்தம் ↔ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ

அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது.↔ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ

இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது; அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது. ‏ 

💠 மறுமையில் அல்லாஹ் வரும்போது;

20:111. இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான்.

أَنَا الْجَبَّارُ , أَنَا الْمَلِكُ , أَيْنَ الْجَبَّارُونَ ؟ أَيْنَ الْمُتَكَبِّرُونَ

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) – நபி (ஸல்) – மறுமையில் அல்லாஹ் கூறுவான் நான் தான் அடக்கியாளக்கூடியவன், நான் தான் அரசன், பூமியில் அடக்கியாண்டவர்கள் எங்கே? பெருமையடித்தவர்கள் எங்கே என கேட்பான்….

 சூரா அல்ஃபஜ்ர் 89 : 15, 16, 17, 18

(15) ஆனால், இறைவன் மனிதனுக்கு கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும் போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான்

(16) எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை (இறைவன்) சோதித்தாலோ, அவன், “என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான்.

(17) அப்படியல்ல! நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவது இல்லை.

(18) ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.