தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 89
❤ வசனம் : 47
وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَؕ وَمَاۤ اُولٰٓٮِٕكَ
بِالْمُؤْمِنِيْنَ
↔ وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا
நாங்கள் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதரையும் ஈமான் கொண்டோம் மேலும் கட்டுப்படுகிறோம்
↔ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَؕ
(ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர்
எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர். ↔ وَمَاۤ اُولٰٓٮِٕكَ بِالْمُؤْمِنِيْنَ
“அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்” என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் – எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர்.
💠முனாபிக்குகள் இஸ்லாத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வார்கள் ஆனால் கட்டுப்பட மாட்டார்கள்.
💠ஒருவரை விமர்சனம் செய்யும்போது நடுநிலையாக விமர்சிக்க வேண்டும்.
❤ ஸூரத்துன்னிஸாவு 4:142
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் – மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்); இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதில்லை.
கருத்துரைகள் (Comments)