தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 94
❤ வசனம் : 55
وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ
الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ
اَمْنًا ؕ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ
↔ وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை
لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ↔ அவர்களுக்கு பூமியில் ஆட்சியை கொடுப்பதாக
↔ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ
அவர்களுக்கு முன்னால் ஆட்சியை கொடுத்தது போன்று
↔ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ
அவன் பொருந்திக்கொண்ட மார்க்கத்தில் பிடிப்போடு இருப்பதற்காகவும்
↔ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا
அவர்களுடைய பயத்திற்கு பிறகு பாதுகாப்பை தருவதாக வாக்களித்துள்ளான்
↔ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا ؕ
அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்
ؕ ↔ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ
இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
❤ வசனம் : 56
وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَ اٰ تُوا الزَّكٰوةَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
தொழுகையை நிலைநிறுத்துங்கள் ↔ وَاَقِيْمُوا الصَّلٰوةَ
ஜகாத் கொடுத்துவாருங்கள் ↔ وَ اٰ تُوا الزَّكٰوةَ
ரஸூலுக்கு கட்டுப்பாடுங்கள் ↔ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ
நீங்கள் கிருபை(அன்பு) செய்யப்படும் பொருட்டு ↔ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ
(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.
❤ வசனம் : 57
لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِۚ وَمَاْوٰٮهُمُ النَّارُؕ وَلَبِئْسَ الْمَصِيْرُ
↔ لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِۚ
நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம்
அவர்கள் தங்குமிடம் நரகமாகும் ↔ وَمَاْوٰٮهُمُ النَّارُؕ
ஒதுங்கக்கூடிய இடங்களில் அது மிக மோசமான இடமாகும்.↔ وَلَبِئْسَ الْمَصِيْرُ
நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.
وَمَنْ مَاتَ وَلَيْسَ فِي عُنُقِهِ بَيْعَةٌ مَاتَ مَيْتَةً جَاهِلِيَّةً “
இப்னு உமர் (ரலி)-நபி (ஸல்) – யார் பைஅத் செய்யாமல் மரணிக்கிறாரோ அவர் ஜாஹிலிய்யத்தான மரணத்தை சந்திக்கிறார்.
இஸ்லாமிய கிலாஃபத்திற்கான நிபந்தனைகள்
- ஈமான் இருக்க வேண்டும்.
- நல்ல அமல்கள் இருக்க வேண்டும்.
- அல்லாஹ் வுக்கு கட்டுப்பட்ட அடிமைகளாக இருக்க வேண்டும்.
- ஷிர்க் செய்யக்கூடாது.
முஸ்லீம் மக்கள் நிதானமாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கருத்துரைகள் (Comments)