தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 99A

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 99A

 வசனம் : 58

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِيَسْتَـاْذِنْكُمُ الَّذِيْنَ مَلَكَتْ اَيْمَانُكُمْ وَالَّذِيْنَ لَمْ يَـبْلُغُوا الْحُـلُمَ مِنْكُمْ ثَلٰثَ

مَرّٰتٍ‌ؕ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِيْنَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيْرَةِ وَمِنْۢ بَعْدِ صَلٰوةِ

الْعِشَآءِ ‌ؕ  ثَلٰثُ عَوْرٰتٍ لَّـكُمْ‌ ؕ لَـيْسَ عَلَيْكُمْ وَ لَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّ‌ ؕ طَوّٰفُوْنَ عَلَيْكُمْ

بَعْضُكُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ

ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும்நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் “ளுஹர்” நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் – இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லைஇவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.

வசனம் அருளப்பட்ட பின்னணி

இமாம் குர்துபி

💠 ஒரு நாள் நபி (ஸல்) முத்லிஜ் என்ற  ஒரு சிறுவரை உமர் (ரலி) அவர்களது வீட்டிற்கு அனுப்பினார்கள். அவர் வீட்டின் கதவை  தட்டியபோது கதவு திறக்கப்பட்டவுடன் சிறுவர் உள்ளே நுழைந்தபோது உமர் (ரலி) யின் ஆடை லேசாக விலகியிருந்ததில் உமர் (ரலி) மனவேதனை அடைந்தார்கள். இவ்வாறான நேரங்களில் சிறுவர்களாக இருந்தாலும் அனுமதி பெற்றுக்கொண்டு வந்தால் நன்றாக இருக்குமே என்று உமர்(ரலி) மனதில் நினைத்துக்கொண்டு அந்த சிறுவரை நபி (ஸல்) விடம் அழைத்து சென்றபோது நபி (ஸல்) இந்த வசனத்தை ஓதி காண்பித்தார்கள். உமர் (ரலி) அதை கேட்டவுடன் சுஜூதில் விழுந்தார்கள்.

(தஃப்ஸிர் குர்துபி)