ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 22

 

ஹதீத் பாகம் – 22

ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

حَدَّثَنِي يحي بن موسى، حَدَّثَنَا وكيع، حَدَّثَنَا إسماعيل، عَنْ قيس، قَالَ : سَمِعْتُ

خَبَابا وَقَدِ اكْتَوَى يَوْمَئِذٍ سَبْعًا فِي بَطْنِهِ، وَقَالَ : ” لَوْلَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَليْهِ

وَسَلَّمَ نَهَانَا أَنْ نَدْعُوَ بِلْمَوْتِ لَدَعَوْتُ بِلْمَوْتِ، إِنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صَلّى اللهُ عَلَيْهِ

وَسَلَّمَ مَضَوْا وَلَمْ تَنْقُصْهُمُ الدُّنْيَا بِشَيْءٍ، وَإِنَّا أَصَبْنَا مِنَ الدُّنْيَا مَا لَا نَجِدُ لَهُ مَوْضِعًا

إِلَّا التُّرَابَ

ஹப்பாப் இப்னு அரத் (ரலி) வை ஒரு தாபிஃ சந்திக்க வந்த பொது அவரது வயிற்றில் 7 சுட்ட அடையாளம் இருந்தது. அப்போது ஹப்பாப் (ரலி) – நபி (ஸல்) மரணத்தை கேட்டு துஆ செய்வதை தடை செய்யாவிட்டால் நான் அதை கேட்டு துஆ செய்திருப்பேன். நபி (ஸல்) வின் தோழர்கள் போய்விட்டார்கள் அவர்களுடைய கூலியிலிருந்து இந்த உலகம் எந்த ஒன்றையும் குறைக்கவில்லை. இந்த உலகத்தில் எல்லா விஷயங்களையும் நாங்கள் அனுபவித்து விட்டோம் கிடைத்த பொருளாதாரத்தை மண்ணில் போடும் அளவிற்கு.

வேறொரு செய்தியில்:

 நான் ஹப்பாப் (ரலி) யை சந்திக்க சென்ற போது அவர்கள் வீட்டைக் கட்டிக் கொண்டிருந்தார்கள் அப்போது இது போல கூறினார்கள்.

 அபூவாயில் (ரலி) ஹப்பாப் (ரலி) யை பற்றி அறிவிக்கிறார்கள் – நாங்கள் நபியவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம் என்று கூறி விட்டு இந்த செய்தியைக் கூறினார்கள்.  

باب قول الله تعالى يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا

يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا

من أصحاب السعير جمعه سعر قال مجاهد الغرور الشيطان