ஹதீத் பாகம் – 44
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
باب كيف كان عيش النبي صلى الله عليه وسلم وأصحابه وتخليهم من الدنيا
நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களது வாழ்வும் அவர்கள் உலக விஷயத்தில் எப்படி ஒதுங்கி இருந்தார்கள் என்பது பற்றிய பாடமும்
أن أبا هريرة كان يقول ألله الذي لا إله إلا هو إن كنت لأعتمد بكبدي على الأرض
من الجوع وإن كنت لأشد الحجر على بطني من الجوع ولقد قعدت يوما على
طريقهم الذي يخرجون منه فمر أبو بكر فسألته عن آية من كتاب الله ما سألته إلا
ليشبعني فمر ولم يفعل ثم مر بي عمر فسألته عن آية من كتاب الله ما سألته إلا
ليشبعني فمر فلم يفعل ثم مر بي أبو القاسم صلى الله عليه وسلم فتبسم حين رآني
وعرف ما في نفسي وما في وجهي ثم قال يا أبا هر قلت لبيك يا رسول الله قال
الحق ومضى فتبعته فدخل فاستأذن فأذن لي فدخل فوجد لبنا في قدح فقال من أين
هذا اللبن قالوا أهداه لك فلان أو فلانة قال أبا هر قلت لبيك يا رسول الله قال الحق
إلى أهل الصفة فادعهم لي قال وأهل الصفة أضياف الإسلام لا يأوون إلى أهل ولا
مال ولا على أحد إذا أتته صدقة بعث بها إليهم ولم يتناول منها شيئا وإذا أتته
هدية أرسل إليهم وأصاب منها وأشركهم فيها فساءني ذلك فقلت وما هذا اللبن في
أهل الصفة كنت أحق أنا أن أصيب من هذا اللبن شربة أتقوى بها فإذا جاء أمرني
فكنت أنا أعطيهم وما عسى أن يبلغني من هذا اللبن ولم يكن من طاعة الله وطاعة
رسوله صلى الله عليه وسلم بد فأتيتهم فدعوتهم فأقبلوا فاستأذنوا فأذن لهم
وأخذوا مجالسهم من البيت قال يا أبا هر قلت لبيك يا رسول الله قال خذ فأعطهم
قال فأخذت القدح فجعلت أعطيه الرجل فيشرب حتى يروى ثم يرد علي القدح
فأعطيه الرجل فيشرب حتى يروى ثم يرد علي القدح فيشرب حتى يروى ثم يرد
علي القدح حتى انتهيت إلى النبي صلى الله عليه وسلم وقد روي القوم كلهم فأخذ
القدح فوضعه على يده فنظر إلي فتبسم فقال أبا هر قلت لبيك يا رسول الله قال
بقيت أنا وأنت قلت صدقت يا رسول الله قال اقعد فاشرب فقعدت فشربت فقال
اشرب فشربت فما زال يقول اشرب حتى قلت لا والذي بعثك بالحق ما أجد له
مسلكا قال فأرني فأعطيته القدح فحمد الله وسمى وشرب الفضلة
அபூஹுரைரா (ரலி) அவர் கூறினார் – எவனைத்தவிர வேறு இறைவனில்லையோ அவன் மீது சத்தியமாக (நபி (ஸல்) வின் காலத்தில்) பசியின் காரணமாக எனது ஈரலை நிலத்தில் வைத்து அமர்த்துவேன் பசியின் காரணமாக எனது வயிற்றில் கல்லை கட்டிக்கொள்வேன் ஒரு நாள் பசியின் அகோரத்தின் காரணமாக பள்ளிவாயிலில் அனைவரும் வெளியேறும் பக்கம் அமர்ந்தேன் அபூபக்கர் (ரலி) அந்த பக்கம் சென்றார்கள் அப்போது அல்லாஹ் வுடைய வேதவசனத்தைப்பற்றி அவரிடம் கேட்டேன் அவர் எனது பசியை புரிந்து கொண்டு உணவளிப்பார் என்ற நோக்கத்தில் தான் கேட்டேன் ஆனால் அவர் அதை புரிந்து கொள்ளவில்லை பிறகு உமர் (ரலி) சென்றார்கள் அவரிடம் ஒரு குர்ஆன் வசனத்தை பற்றி கேட்டேன் அவரும் அதே போன்று குர்ஆனை விளங்க வைத்துவிட்டு சென்று விட்டார்கள் பிறகு நபி (ஸல்) சென்றார்கள் என்னைக்கண்டதும் புன்னகைத்தார்கள் என்னுடைய உள்ளத்தில் உள்ளதையும் முகத்தில் உள்ளதையும் அறிந்து கொண்டார்கள் அபூஹுரைராவே என்று அழைத்தார்கள் இதோ நான் இருக்கிறேன் யா ரசூலுல்லாஹ் என்று பதிலளித்தேன் என்னுடன் வாருங்கள் என்று அழைத்ததும் நான் பின்னால் சென்றேன் வீட்டிற்குள் சென்றார்கள் உள்ளே செல்ல அனுமதி கேட்டார்கள் பிறகு அனுமதியளிக்கப்பட்டது அங்கு நபி (ஸல்) பாலை கண்டார்கள் இது எங்கிருந்து வந்தது என வீட்டில் உள்ளவர்களை கேட்டார்கள் இன்னார் இதை தந்தார்கள் என அவர்கள் பதிலளித்தார்கள் அபூஹுரைராவை அழைத்ததும் ஆஜராகிறேன் என்று அவர் கூறினார்கள் சுஃப்பா வாசிகளை அழைத்து வாருங்கள் அவர்கள் இஸ்லாத்தின் விருந்தினர்கள் அவர்களுக்கு சொத்தும் இல்லை குடும்பமும் இல்லை அவர்களுக்கு பொறுப்பெடுக்கவும் யாருமில்லை நபி (ஸல்) விற்கு எப்போது ஸதகா வந்தாலும் அதை அவர்களுக்கு அனுப்பி விடுவார்கள் அதில் எதையும் நபி (ஸல்) எடுக்க மாட்டார்கள் நபி (ஸல்) விற்கு அன்பளிப்புகள் வந்தால் அதை நபி (ஸல்) அவர்களும் எடுத்துக்கொண்டு அவர்களுக்கும் பங்கு கொடுப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அந்த நேரம் அதை சொன்னது எனக்கு வருத்தமாக இருந்தது. இந்த பால் இத்தனை பேருக்கும் போதாதே என்று நினைத்துக்கொண்டேன் அந்த பாலை குடிப்பதற்கு இவர்கள் அனைவரையும் விட நான் தான் தகுதியானவனாக இருந்தேன் அவர்களை அழைத்து இதை நான் தான் அவர்களுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும் பிறகு எனக்கு கிடைக்குமா என்று நினைத்தேன் ஆனாலும் அல்லாஹ்வுடையவும் அவனுடைய தூதருடைய கட்டளைக்கு நான் கட்டுப்பட வேண்டுமே அதனால் நான் அவர்களை அழைத்து வந்தேன் அவர்களும் வீட்டிற்குள் வர அனுமதி கேட்டார்கள் அனுமதியளிக்கப்பட்டது அவர்கள் வீட்டில் அமர்ந்ததும் அபூஹுரைரே என்று நபி (ஸல்) அழைத்ததும் நான் ஆஜராகிறேன் என்று கூறினேன் நபி (ஸல்) என்னிடம் அந்த பாலை அவர்களுக்கு கொடுக்கச்சொன்னார்கள் நானும் ஒவ்வொருக்கும் கொடுத்தேன் ஒவ்வொருவரும் குடித்து முடித்து என்னிடம் தந்தார்கள் பிறகு அங்குள்ள அனைவரும் குடித்த பிறகு நபி (ஸல்) அந்த பால் கோப்பையை என்னுடைய கையிலிருந்து எடுத்தார்கள் நபி (ஸல்) கோப்பையை எடுத்து புன்னகைத்து அபூஹூரைரே என்று அழைத்தபோது ஆஜரானேன் யா ரசூலுல்லாஹ் என்ற போது நீங்களும் நானும் தான் பாக்கியாக இருக்கிறோம் என்று கூறியபோது ஆமாம் யா ரசூலுல்லாஹ் என்றேன் அப்போது நபி (ஸல்) என்னை உட்காரச்சொன்னார்கள் நான் உட்கார்ந்தேன் குடிக்க சொன்னார்கள் நான் குடித்தேன் மீண்டும் மீண்டும் குடிக்கச்சொல்லிக்கொண்டே இருந்தார்கள் நானும் குடித்தேன் பிறகு இனி எனக்கு குடிக்க வயிற்றில் இடமே இல்லை என்று கூறும் வரை நபி (ஸல்) குடிக்கச்சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அந்த கோப்பையை கேட்டார்கள் நான் கொடுத்தேன் நபி (ஸல்) அல்ஹம்துலில்லாஹ் கூறி பிறகு பிஸ்மில்லாஹ் கூறி அல்லாஹ் வின் பரக்கத்திலிருந்து எஞ்சியதைக்குடித்தார்கள்.
கருத்துரைகள் (Comments)