ஹதீஸ் பாகம்-62
ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
ஸூரத்துத் தலாஃக் 65:3
باب ومن يتوكل على الله فهو حسبه
மேலும், எவர், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவனை முற்றிலும் சார்ந்திருக்கிறாரோ, அவருக்கு அவன் போதுமானவன்.
⚜ باب ومن يتوكل على الله فهو حسبه قال الربيع بن خثيم من كل ما ضاق على الناس
ரபீஹ் இப்னு ஹுஸைம் என்ற அறிஞர் – மக்களுக்கு வாழ்வில் ஏற்படும் அனைத்து நெருக்கடிகளுக்கும் இறைவன் போதுமானவன் என நம்பியவருக்கு இறைவனே போதுமானவன்.
⚜ حصين بن عبد الرحمن قال كنت قاعدا عند سعيد بن جبير فقال عن ابن عباس أن رسول الله صلى الله
عليه وسلم قال يدخل الجنة من أمتي سبعون ألفا بغير حساب هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون
இப்னு அப்பாஸ் (ரலி) – நபி (ஸல்) – என் உம்மத்தில் 70,000 நபர்கள் எந்த ஒரு விசாரணையுமின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்கள் பிறரிடத்தில் தமக்காக மந்திரித்து கேட்க மாட்டார்கள் மேலும் சகுனம் பார்க்க மாட்டார்கள் மேலும் இறைவன் மீது மட்டுமே பொறுப்புச்சாட்டுவார்கள்.
கருத்துரைகள் (Comments)