ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் 64

ஹதீஸ் பாகம்-64

ஸஹீஹூல் புஹாரியின்நெகிழ்வூட்டும் உபதேசங்கள்

باب حفظ اللسان  

நாவைப்பேணிக்கொள்ளல்

 باب حفظ اللسان وقول النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت

وقوله تعالى ما يلفظ من قول إلا لديه رقيب عتيد

நபி (ஸல்) – யார்  அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் நல்லதைப்பேசட்டும் அல்லது  மெளனமாக இருக்கட்டும்.

ஸூரத்து காஃப் 50:18

கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.

⚜ عن سهل بن سعد عن رسول الله صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه

أضمن له الجنة

சஹல் இப்னு சஹத் (ரலி)-நபி (ஸல்)- யார் தனது 2 காலுக்கு மத்தியில் இருப்பதையும் 2 தாடைக்கு மத்தியிலிருப்பதையும் நான் பாதுகாத்துக்கொள்வேன் என்று என்னிடத்தில் உறுதி கூறுகிறாரோ அவருக்கு சொர்கத்திற்கு நான் பொறுப்பு.