ஸீரா பாகம் – 1
உன் நபியை அறிந்துகொள்
❤ ஸூரத்துத் தவ்பா 9:128
لَـقَدْ جَآءَكُمْ رَسُوْلٌ مِّنْ اَنْفُسِكُمْ عَزِيْزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيْصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِيْنَ
رَءُوْفٌ رَّحِيْمٌ
❤ ஸூரத்துத் தவ்பா 9:129
فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِىَ اللّٰهُ ۖ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ ؕ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ
➥ (நபியே! இதன்) பின்னரும், அவர்கள் (உங்களை விட்டு) விலகி விட்டால் (அவர்களை நோக்கி,) “எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக!
❣ நபியை பின்பற்றுறாதவர் நபியை அறிய வேண்டிய முறைப்படி அறியவில்லை.
❤ ஸூரத்துல் அஹ்ஜாப 33:56
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ ؕ يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ وَسَلِّمُوْا تَسْلِيْمًا
➥ இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
❣ நரகத்திற்கு செல்பவன் தான் நபியை அறியாமலும் அவரை புறக்கணிக்கவும் செய்வான்.
❤ ஸூரத்துல் அஃலா 87: 10, 11, 12
(10) سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ
➥ (அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
(11) وَيَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ
➥ ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
(12) الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰىۚ
➥ அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
கருத்துரைகள் (Comments)