ஸீரா பாகம் – 19
உன் நபியை அறிந்துகொள்
💠 முஸ்லிம்கள் மிக மகிழ்ச்சியுடன் நபி (ஸல்) வை வரவேற்றார்கள். மதீனாவின் வாசலில் சிறுவர்களை நிறுத்தி கவிதை பாடி வரவேற்றார்கள்.
💠 அனைவரும் நபி (ஸல்) தங்கள் வீட்டில் தங்க வேண்டும் என விரும்பி அழைத்தார்கள் நபி (ஸல்) தன் ஒட்டகத்திற்கு வஹீ வருகிறது அது எங்கே நிற்கிறதோ அங்கே தங்க முடிவு செய்தார்கள். ஒட்டகம் அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) வீட்டில் நின்றது. உடனே அபூ அய்யூப் அல் அன்சாரி (ரலி) நபி (ஸல்) வின் பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்தார்கள். மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு வருமாறு நபி (ஸல்) விடம் கேட்டபோது ஒரு மனிதன் தன் பொருட்களுடன் தானே இருக்க முடியும் என்று கூறி அபூ அய்யூப் (ரலி) வீட்டில் தங்கினார்கள்
💠 பிறகு மஸ்ஜித் நபவியை நிர்மானித்தார்கள். அதை சுற்றி நபி (ஸல்) அவர்கள் தங்களுக்கு அறைகளை அமைத்தார்கள்
கருத்துரைகள் (Comments)