ஸீரா பாகம் – 4
உன் நபியை அறிந்துகொள்
✥ நபி(ஸல்) – என் தாய் தன் உடம்பிலிருந்து ஒரு பெரும் ஒளி ஏற்பட்டதை பார்த்தாள்.
✥ நபி(ஸல்) ஹலீமா சஹதியா என்றவரிடம் பால் குடித்து வளர்ந்தார்கள். நபி(ஸல்) வை எடுக்க வரும்போது மெலிந்த கழுதையில், மெல்லிய ஒட்டகத்தில் மக்காவுக்கு வந்தார்கள். நபி(ஸல்) அனாதை குழந்தையாக இருந்ததால் அவர்களை யாரும் கொண்டு போகவில்லை. ஆனால் ஹலீமா அவர்கள் நபி(ஸல்) வை கூட்டிச்செல்லும் போது அவர்களது ஒட்டகமும் கழுதையும் நன்றாக ஆகிவிட்டது. ஊரெல்லாம் பஞ்சமாக இருக்கும்போது ஹலீமா அவர்களின் ஆடுகள் மட்டும் செழிப்பாக இருந்தது.
✥ 2 ஆண்டுகள் பால் கொடுத்தபின்னும் நபி(ஸல்) வை பிரிய மனமில்லாமல் மீண்டும் தாயார் ஆமினா அவர்களிடம் அனுமதி பெற்று கொண்டுபோனார்கள்.
✥ நபி(ஸல்) – விளையாடிக் கொண்டிருக்கும் போது ஜிப்ரயீல்(அலை) வந்து நபி(ஸல்) வின் நெஞ்சை பிளந்து ஸம்ஸம் நீரைக்கொண்டு சுத்தப்படுத்தினார்கள். நபி(ஸல்) வின் நெஞ்சு பிளக்கப்பட்டு பிறகு சேர்க்கப்பட்ட அந்த அடையாளத்தை நான் பார்த்தேன் என்று அனஸ்(ரலி) அறிவித்தார்கள். இந்த சம்பவம் நபி(ஸல்) வின் 4 ஆவது வயதில் நடந்தது. ஆதலால் மனமில்லாமல் நபி(ஸல்) வை அவருடைய தாயாரிடம் ஒப்படைத்தார்கள்.
கருத்துரைகள் (Comments)