பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 1
துஆக்கள் தொடர்பாக காலம் காலமாக பற்பல நூற்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
உதாரணம்:
🍁இமாம் நஸயீ عمل اليوم والليلة அமலு யவ்மின் வல்லய்லா என்ற துஆ புத்தகத்தை தொகுத்தார்கள்.
🍁இமாம் நவவீ ரஹ் اذكار என்ற தனி நூல் துஆக்கள் தொடர்பாக எழுதியுள்ளார்கள். அதில் ரியாளுஸ்ஸாலிஹீனையும் சேர்ப்பார்கள்.
🍁இமாம் இப்னு தைமிய்யாஹ் வின் “الكلم الطيب”அல்கலீமுதய்யிப் என்ற தொகுப்பு உள்ளது. இவரது இந்த நூலை ஸஹீஹ் ளயீப் என்ற அடிப்படையில் பிரித்து ஷேக் அல்பானீ (ரஹ்)அவர்கள் صحيح الكلم الطيب என்று பிரித்து எழுதியுள்ளார்கள்.
🔷இவை போல துஆ க்கள் சம்மந்தமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகள் உள்ளன.
🔷நவீன காலத்து தொகுப்புகள் ورد விர்த் அல்லது اوراد அவ்ராத் اذكار அத்கார் என்ற பெயரில் காணலாம்.
سعيد بن علي بن وهف القحطاني சயீத் இப்னு அலீ இப்னு வஹ்ஃப் அல் கஹ்தானீ அவர்கள் الذكر والدعاء والعلاج بالرُّقى من الكتاب والسنة அதிலிருந்து அன்றாட துஆக்களை தனியாக பிரித்தெடுத்த நூல் தான் حصن المسلم ஹிஸ்னுல் முஸ்லீம் என்ற நூல்.
حصن المسلم ஒரு முஸ்லிமின் அரண்
حصن – حصون – கோட்டை
ஆதாரம்:
சூரா அல் ஹஷர் 59:2
கருத்துரைகள் (Comments)