حصن المسلم
பிரார்த்தனைப் பேழை
(முஸ்லிமின் அரண்)
PART – 61
28- “سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك، ولا أ له غيرك
யா அல்லாஹ் நீ தூய்மையானவன் ↔ سبحانك اللهم
மேலும் புகழ் அனைத்தும் உனக்கே உரியது ↔ وبحمدك
உனது பெயர்கள் பரக்கத் பெற்றவைகள் ↔ وتبارك اسمك
மேலும் உனது கண்ணியம் மகத்தானது ↔ وتعالى جدك،
⬇️↔ ولا أ له غيرك
மேலும் உன்னை தவிர வணக்கத்திற்கு தகுதியானவர்கள் வேறில்லை.
இது 7 நபித்தோழர்கள் வழியாக இடம்பெற்றிருக்கிறது அவற்றுள்
1) அபூ சயீத் அல் ஹுத்ரீ (ரலி) அவர்கள் வழியாக இந்த செய்தி பிரபல்யமாக இருக்கிறது.அதில் இடம்பெறும் அறிவிப்பாளர்களில் அலீ இப்னு அலீ என்பவர் பலஹீனமானவர் (நஸயீ)
2) ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக 3 அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறுகிறது அதில் அபுல் ஜவ்சா அவர்களுக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே அது பலஹீனமானதாகும். அபுல் ஜவ்சா இடம்பெறாத வேறொரு வழியிலும் இடம்பெறுகிறது அதிலும் பலஹீனங்கள் உள்ளன.
هَذا حَدِيتُ لا تعرفه من حديث عائشة إلأ من هذا الوجه.
இமாம் திர்மிதி – இந்த வழியை தவிர ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் எங்களுக்கு தெரியவில்லை.இதில் இடம்பெறும் ஹாரிஸா என்பவர் மனரீதியாக விமர்சனங்களுக்கு உட்பட்டவர்.
《☆》 இப்னு ஹுஸைமா மற்றும் இமாம் அபூதாவூத் ரஹ் ஹாரிஸாவை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். என்னிடம் இது நிரூபணம் இல்லாத செய்தியாகும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
《☆》 இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ, ஷேக் அபூ இஸ்ஹாக் அல் குவைனி,அவர்களும் இதை பலஹீனம் என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
3) அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் வழியாக வந்த அறிவிப்பு. சிலர் இதை முன்கர் (அறிவிப்பாளர் வரிசை சரியாக இருப்பினும் இந்த தொடரில்முன்கர் ஆனா ஒரு அறிவிப்பாளர் இடம் பெறுகிறார்.)
4) வாதிலதிப்னுல் அஸ்கா (ரலி) வழியாகவும் இந்த செய்தி இடம்பெறுகிறது. இதில் அம்ர் இப்னுல் ஹுசைன் என்ற அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். அதனால் இது பலஹீனமான அறிவிப்பாகும்
5) உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் வழியாகவும் இடம்பெறும் செய்தி பலஹீனமானதாகும்.
6) அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) அவர்கள் வழியாக இடம்பெறும் செய்தியும் பலஹீனமானது.
7) அல் ஹகம் இப்னு உமைர் அஸ் சுமாலி என்பவர் வழியாக இடம்பெறும் அறிவிப்பும் பலஹீனமானதாகும்.
《☆》 இவ்வாறான பலஹீனமான அறிவிப்புகளாக இருப்பினும் இதை ஹசன் லி கைரிஹீ அல்லது சஹீஹுன் லி கைரிஹி என்ற தரத்திற்கு கொண்டுவரலாம் என கூறப்படுகிறது.
《☆》 ஷேக் அல்பானீ (ரஹ்) இந்த ஹதீஸை ஸஹீஹ் ஆக்கியுள்ளார்கள். மேலும் பல அறிஞர்களும் இதை ஸஹீஹ் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
《☆》 இந்த துஆ நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இல்லாமல் நபித்தோழர்கள் சொன்னதாக 4 அறிவிப்புகள் இடம்பெறுகின்றன (موقوف).
- அபூபக்கர் (ரலி) வழியாக வரும் செய்தி பலஹீனமானதாகும்.
- அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி)
- உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி)
- உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் வழியாக வரும் உமர் (ரலி) அவர்களது கூற்று ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறுகின்றது.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، عَنْ عَبْدَةَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، كَانَ يَجْهَرُ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ يَقُولُ: «سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ، تَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ»
918 அப்தா அறிவிக்கிறார்கள்- உமர் (ரலி) தொழுகையில் இந்த துஆ வை மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக சப்தமிட்டு சொல்லக்கூடியவர்களாக இருந்தார்கள்.
سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسٍ، قَالَ: ” صَلَّيْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، فَلَمْ أَسْمَعْ أَحَدًا مِنْهُمْ يَقْرَأُ {بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ} [الفاتحة: 1] “
இமாம் முஸ்லீம் குறிப்பிடுகையில் – அனஸ் இப்னு மாலிக் (ரலி) இமாம் கத்தாதா (ரஹ்) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள் ” நான் நபி (ஸல்) அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதிருக்கிறேன், அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) அவர்கள் பின்னாலெல்லாம் தொழுதிருக்கிறேன். அவர்கள் தங்கள் தொழுகைகளை அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீனை கொண்டு துவங்கினார்கள். அதில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானி ரஹீம் சொல்ல மாட்டார்கள். தொழுகையின் ஆரம்பத்திலும் சொல்ல மாட்டார்கள் இறுதியிலும் சொல்ல மாட்டார்கள்.
《☆》 இமாம் மாலிக் அவர்களும் மதீனாவாசிகள் தொழுகையில் ஆரம்ப துஆ ஓதுவதில்லை என குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் மற்ற பிற அறிஞர்கள் இதற்கு மறுப்பு தெரிவிக்கையில் அனஸ் (ரலி) அவர்களின் இந்த கூற்றில் பிஸ்மில்லாஹ் சொல்ல மாட்டார்கள் என்பதற்காகவே, ஆரம்ப துஆ வை மறுப்பதற்காக அல்ல என்று விவரிக்கின்றனர்.
《☆》 இவையல்லாமல் வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய துஆ வுடன் சேர்ந்ததாக மேலும் 3 வழியாக இடம்பெறுகிறது.
- ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) வழியாக
- அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) வழியாக
- அலீ இப்னு அபீதாலிப் (ரலி) வழியாக
மேற்கூறப்பட்ட 3 வழியும் பலஹீனமானதாகும்.
《☆》 ஆகவே இந்த துஆ உமர் (ரலி) பகிரங்கமாக மக்களுக்கு கற்றுக்கொடுத்ததால் இதை ஆதாரமாக எடுப்பதில் எந்த பிழையுமில்லை என்பதை புரிந்து கொள்கிறோம்.
وعن أبي ذر رضي الله عنه قال، قال رسول الله صلى الله عليه وسلم:
(( أَلاَ أُخْبِرُكَ بِأَحَبّ الْكَلاَمِ إِلَىَ اللّهِ؟ قُلْتُ: يَا رَسُولَ اللّهِ أَخْبِرْنِي بِأَحَبّ الْكَلاَمِ إِلَىَ اللّهِ. فَقَالَ “إِنّ أَحَبّ الْكَلاَمِ إِلَىَ اللّهِ، سُبْحَانَ اللّهِ وَبِحَمْدِهِ ))
அபூதர் அல் கிபாரி (ரலி) – நபி (ஸல்) என்னிடம் “அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான வார்த்தையை உங்களுக்கு கற்றுத்தரவா?” என்று கேட்டார்கள் அப்போது நான் “கற்றுத்தாருங்கள்” என்றேன் அப்போது”வார்த்தைகளில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது سُبْحَانَ اللّهِ وَبِحَمْدِهِ என்பதாகும்.
(முஸ்லீம்)
عَنْ عَبْدِ اللَّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” إِنَّ أَحَبَّ الْكَلامِ إِلَى اللَّهِ أَنْ يَقُولَ الْعَبْدُ : سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلا إِلَهَ غَيْرَكَ ، وَإِنَّ أَبْغَضَ الْكَلامِ إِلَى اللَّهِ أَنْ يَقُولَ الرَّجُلُ لِلرَّجُلِ : اتَّقِ اللَّهَ فَيَقُولُ : عَلَيْكَ نَفْسَكَ ” . أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاءِ ، قَالَ : حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ، قَالَ : حَدَّثَنَا الأَعْمَشُ ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ ، عَنِ الْحَارِثِ بْنِ سُوَيْدٍ ، قَالَ : قَالَ عَبْدُ اللَّهِ : ” إِنَّ مِنْ أَحَبِّ الْكَلامِ إِلَى اللَّهِ أَنْ يَقُولَ الرَّجُلُ : سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلا إِلَهَ غَيْرَكَ ، رَبِّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ، فَاغْفِرْ لِي ذُنُوبِي ، إِنَّهُ لا يَغْفِرُ الذُّنُوبَ إِلا أَنْتَ ، وَإِنَّ مِنْ أَكْبَرِ الذَّنْبِ عِنْدَ اللَّهِ”، مِثْلَهُ . أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ ، قَالَ : حَدَّثَنَا مُصْعَبٌ ، قَالَ : حَدَّثَنَا دَاوُدُ ، عَنِ الأَعْمَشِ ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ، وَقَالَ : عَنْ عَبْدِ اللَّهِ “مِنْ أَحَبِّ الْكَلامِ”.
10619: அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) – அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான வார்த்தை
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ ، وَتَبَارَكَ اسْمُكَ ، وَتَعَالَى جَدُّكَ ، وَلا إِلَهَ غَيْرَكَ
அல்லாஹ்விற்கு மிகவும் வெறுப்பான வார்த்தை ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப்பார்த்து அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று சொல்லும்போது – உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என்று பதிலளிப்பதாகும்.
(சுனனுல் குப்ரா நஸயீ)
《☆》 இந்த அறிவிப்பை ஆய்வு செய்தால் இது அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) அவர்களது கருத்தாக தெரிகிறது. ஆயினும் அல்லாஹ்விற்கு வெறுப்பும் விருப்பமும் எதுவென்று ஸஹாபியால் சொல்ல முடியாது என்பதால் இது நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டதனாலேயே அறிவிக்கிறார்கள் என புரிந்து கொள்ளலாம்.
கருத்துரைகள் (Comments)