ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 22

التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات 

அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள் 

பாகம் – 22

புரைதா (ரலி) – ஒரு மனிதர் “

 اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّه لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، الأَحَدُ، الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ، وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

யா அல்லாஹ் நான் உன்னிடம் கேட்கிறேன், நீ தான் அல்லாஹ் என்று நிச்சயமாக நான் சாட்சி சொல்லுகிறேன், உன்னைத்தவிர வணக்கத்திற்கு தகுதியான உண்மையான கடவுள் யாருமில்லை, நீ தான் தனித்தவன் எந்த தேவையும் அற்றவன், யாரையும் பெற்றெடுக்காத யாராலும் பெறப்படாதவன், உனக்கு நிகராக எதுவுமே இல்லை “

என்று கூறி பிரார்த்தித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் 

 فَقَالَ: «لَقَدْ سَأَلَ اللَّهُ بِاسْمِهِ الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى, وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ ⭐   

கேட்டால் மறுக்கப்படாத பிரார்த்தித்தால் நிராகரிக்கப்படாத அந்த பெயரைக்கொண்டு நீ அல்லாஹ்விடத்தில் கேட்டிருக்கிறாய் என்று கூறினார்கள்.((திர்மிதி, அபூதாவூத், இப்னு மாஜா))

ஆனால் இஸ்முல் அஹ்லம் ஆகிய அந்த பெயர் எது என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக்கூறவில்லை.

ஷேக் அல்பானி (ரஹ்) அவர்கள் இதை ஸஹீஹ் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) – இஸ்முல் அஹ்லம் சம்மந்தமாக வந்த ஹதீஸுகளில் இது தான் மிக சிறந்த அறிவிப்பாளர் வரிசையைக்கொண்டது.

இஸ்முல்லாஹில் அஹ்லம் எது என்பது நபி (ஸல்) குறிப்பிட்டு கூறாத காரணத்தினால் உலமாக்கள் அதை ஆய்வு செய்து பல்வேறு கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

முதல் கருத்து 

சில அறிஞர்கள்:- இஸ்முல் அஹ்லம் என்ற ஒரு குறிப்பிட்ட மகத்தான பெயர் அல்லாஹ்விற்கு இல்லை என்று கூறுகிறார்கள். இக்கருத்து ஏற்புடையதல்ல 

இரண்டாவது கருத்து 

அல்லாஹ் வின் மகத்தான பெயர் எது என்பதை அடியார்களுக்கு சொல்லிக்கொடுக்கவில்லை அதை அவன் மறைத்துவிட்டான்.

மூன்றாவது கருத்து 

அல்லாஹ்விற்கு இஸ்முல் அஹ்லம் இருக்கிறது என்று சில அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த கருத்துடைய அறிஞர்கள் 14 விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர் என பதஹுல் பாரி எனும் ஹதீஸ் விளக்கவுரை நூலில் இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானீ (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.  அவை 

  1. هو அவன் 
  2.  الله அல்லாஹ்
  3.  الله الرحمان الرحيم இந்த 3 பெயர்களும் சேர்ந்தது தான் இஸ்முல் அஹ்லம் என்று சிலர் கூறுகின்றனர்.
  4.  الرحمان الرحيم الحى القيوم இந்த 4 பெயர்களும் சேர்ந்தது 
  5.  الحى القيوم
  6.  -الحنانُ المنانُ بديعُ السماواتِ والأرضِ  ذو الجلال والاكرام الحى القيوم இந்த 7 பெயர்கள் 
  7.  بديعُ السماواتِ والأرضِ  ذو الجلال والاكرام  
  8.  ذو الجلال والاكرام
  9.  الله لا اله الا ه الاحد الصمد الذى لم يلد ولم يولد ولم يكن له كفو احد
  10.  رب رب
  11.  لا اله الا انت سبحانك اني كنت من الظالمين
  12.   هو الله الله الله الذى لا اله الا ه رب العرش العظيم
  13.  அல்லாஹ்வின் திருநாமங்களுக்குள் மகத்தான அந்த பெயர் மறைந்திருக்கிறது 
  14.  لا اله الا الله

இஸ்முல் அஹ்லம் இற்கு மிகவும் நெருக்கமான பெயராக இருப்பது அல்லாஹ் என்ற பெயர் தான் என இந்த ஆய்வுகளை பார்க்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. 

அதற்கு அடுத்தபடியாக  الحى القيوم என்ற பெயர் நெருக்கமாக இருக்கிறது.