التحذير من بعض المسالك المنحرفة في باب الأسماء والصفات
அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகள் விஷயத்தில் உள்ள தவறான அணுகுமுறைகள்
பாகம் – 23
⭐ புத்தக ஆசிரியர் அல்லாஹ் என்ற பெயரின் சிறப்பை இது வரை விளக்கினார்கள். இப்போது அல்லாஹ் என்ற பெயரின் கருத்தை விளக்குகிறார்கள்.
⭐ இதன் அடிப்படை பெயர் ال اله என்பதாகும். ஆகவே ال اله என்பதும் அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்றாகும்.
ஆதாரம் :
ஸூரத்துல் பகரா 2:163
وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ ۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ
ஸூரத்துத் தவ்பா 9:31
…وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ ؕ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ
ஸூரத்துல் அன்பியா 21:108
قُلْ اِنَّمَا يُوْحٰۤى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ ۚ فَهَلْ اَنْـتُمْ مُّسْلِمُوْنَ
அல்லாஹ் என்ற வார்த்தையின் அர்த்தம்
عن ابن عباس قال: الله ذو الألوهية والعبودية على خلقه أجمعين،
இப்னு அப்பாஸ் (ரலி) – தன்னுடைய அனைத்து படைப்புகளும் வணங்கத்தகுதியானவனும் அனைத்து படைப்புகளும் அவனுக்கே
அடிபணிந்து இருக்கின்றன.(தப்ஸீர் தபரீ)
அல்லாஹ் என்ற பெயரில் இருக்கும் கருத்து:
⭐ அல்லாஹ் தான் வணங்கி வழிபடத்தகுதியானவன்
படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் அடிமைகள்
⭐ அல்லாஹ் என்ற பெயரை புரிந்து கொண்ட ஒரு முஃமின் கண்ணியமானவனாக இருப்பான்.
ஸூரத்துல் அன்ஃபால் 8:2
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِيَتْ عَلَيْهِمْ اٰيٰتُهٗ زَادَتْهُمْ اِيْمَانًا وَّعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ۖ
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
⭐ அல்லாஹ் என்ற வார்த்தைக்கு பொருள் அறிந்தால் தான் அவனது கண்ணியம் புரிந்தால் தான் அவனது பெயர் சொல்லப்பட்டால் உள்ளம் நடுங்கும்.
⭐ அல்லாஹ் என்ற பெயரை புரிந்தவன் அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் வணங்கவே மாட்டான், எவருக்கும் பலி அறுக்க மாட்டான்
لا اله الا الله
இதில் அல்லாஹ்வின் 2 பெயர்கள் உள்ளன. அல்லாஹ்வின் பெயரைப்புரிந்தவன் அல்லாஹ்வை தவிர வேறெதனையும் வணங்கவே மாட்டான்.
شَيْخُ الْإِسْلَامِ ابْنُ تَيْمِيَّةَ رَحِمَهُ اللَّهُ تَعَالَى: الْعِبَادَةُ هِيَ اسْمٌ جَامِعٌ لِكُلِّ مَا يُحِبُّهُ اللَّهُ تَعَالَى وَيَرْضَاهُ مِنَ الْأَقْوَالِ وَالْأَعْمَالِ الْبَاطِنَةِ وَالظَّاهِرَةِ
இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) – அல்லாஹ் விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்ளார்ந்த வெளிப்படையான அனைத்து செயல்களும் வணக்கம் என்று கூறப்படும்.
வணக்கம் 2 வகைப்படும்
- உள்ளத்தால் செய்யக்கூடிய வணக்கம் (அல்லாஹ்வை அஞ்சுவது, அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பது, தவக்குல் வைப்பது, இக்லாஸ், தவக்குல், ஆதரவு வைப்பது, அல்லாஹ்வை அஞ்சுவது)
- உடலால் செய்யக்கூடிய வணக்கம் (தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், நேர்ச்சை, குர்பானி, ஸதகா, குர்ஆன் ஓதுவது, நாவால், பணத்தால்…)
⭐ அல்லாஹ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்தால் எந்த சூழலிலும் அவனுக்கு வேறெதையும் நாம் இணை வைக்கவே மாட்டோம்
⭐ பிலால் (ரலி) சுடுமணலில் இட்டு வேதனை செய்யப்பட்டபோதும் அவரது வாயால் அஹத் அஹத் என்று தான் கூறினார்கள்.
ஹப்பாப் (ரலி) நெருப்பின்மீது கட்டித்தூக்கப்பட்டு அவரது உடலிலிருந்து கொழுப்பு கரைந்து வடிந்தபோதும் அல்லாஹ்விற்கு இணை வைக்கவில்லை
⭐ யாசிர் (ரலி) இரண்டாக பிளக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டபோதும் இணைவைக்கவில்லை
சுமையா (ரலி) பிறப்புறுப்பில் அம்பு எய்து கொல்லப்பட்டபோதும் இணைவைக்கவில்லை
கருத்துரைகள் (Comments)