ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 29

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 29

الرَّزَّاقُ و الرازق 

ஸூரத்துத் தாரியாத் 51:58

اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ

நிச்சயமாக அல்லாஹ்தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம் மிக்கவன்; உறுதியானவன்.

வேறுசில இடங்களில் الرَّزَّاقُ என்ற சொல்லின் பன்மையை அல்லாஹ் உபயோகிக்கிறான்.

ஸூரத்துல் ஜுமுஆ 62:11

……وَاللّٰهُ خَيْرُ الرّٰزِقِيْنَ

…………..மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக

ஸூரத்துல் ஹஜ் 22:58

….وَاِنَّ اللّٰهَ لَهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ

(ஏனெனில்) உணவளிப்பவர்களிலெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மேலானவன்

ஸூரத்துல் மாயிதா 5:114

….وَارْزُقْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰزِقِيْنَ

…… நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

மேலும் الرّٰزِق என்ற பெயர் குர்ஆனில் இடம்பெறவில்லை மாறாக ஹதீஸில் இடம்பெறுகிறது. 

 عن أنس بن مالك قال: غلا السعر على عهد رسول الله يَةِ فقالوا: يا رسول الله، لو سغزت، فقال: «إن الله هو الخالق القابض الباسط الرازق المُسَعْرُ، وإِنِّي لأرْجو أنْ ألقَى اللهَ ، و لَا يَطْلُبُني أحدٌ بمظلَمَةٍ ظلمتُها إيَّاه في دمٍ ولا مالٍ

அனஸ் இப்னு மாலிக் (ரலி) – நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் பொருட்களுக்கான விலை அதிகரிக்க ஆரம்பித்தபோது மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விலையை நீங்கள் கட்டுப்படுத்தினால் என்ன என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) “நிச்சயமாக அல்லாஹ்வே படைத்தவனாகவும், சுருக்குபவனாகவும், விரிப்பவனாகவும், இராஜிக் ஆகவும், விலைகளை கட்டுப்படுத்துபவனாகவும் இருக்கிறான். நான் நாளை மறுமையில் அல்லாஹ்வை சந்திக்கும்போது எந்த ஒருவருக்கும் இரத்த விஷயத்திலும் பொருளாதார விஷயத்திலும் அநீதி இழைக்காதவனாக அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன்.

(முஸ்னத் அஹமத் )

குறிப்பு:- 

சந்தையில் விலைக்கட்டுப்பாட்டை ஏற்படுத்தலாமா?

அதிகமான அறிஞர்கள் விலைகளை நிர்ணயிக்கக்கூடாது என்றே கருத்து தெரிவிக்கின்றனர்.

சில அறிஞர்கள் அதற்கான தேவை ஏற்பட்டால் (வியாபாரிகள் விலையை கூட்டினால் ஆட்சியாளர் தலையிட்டு விலையை குறைக்கலாம்) செய்யலாம் என்று கூறுகின்றனர். 

⭐ நபி (ஸல்) ஒருவரிடம் ஒட்டகம் வாங்கிவருமாறு பணம் கொடுத்து அனுப்பினார்கள். வாங்கி வந்தவர் ஒட்டகத்தை நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்துவிட்டு அந்த முழு  பணத்தையும்  அப்படியே நபி (ஸல்) அவர்களிடம் திருப்பி கொடுத்துவிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் காரணம் கேட்டபோது நீங்கள் தந்த பணத்தில் 2 ஒட்டகங்கள் வாங்கி 1 ஒட்டகத்தை இந்த விலைக்கு விற்றுவிட்டேன். அந்த பணம் தான் இது என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதருக்காக துஆ செய்தார்கள்.

இந்த இரண்டு பெயர்களும் )الرَّزَّاقُ و الرازق (ஒரே கருத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது رزق ஐ அதிகமாக வழங்குபவன் என்பதே இதன் பொருளாகும்.