ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா பாகம் 33

ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா

(فقه الأسماء الحسنى)  

பாகம் – 33

ரிஸ்கில் ஹலாலும் ஹராமும் இருக்கிறது 

ஸூரத்து யூனுஸ் 10:59

قُلْ اَرَءَيْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَـكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ؕ قُلْ آٰللّٰهُ اَذِنَ لَـكُمْ‌ اَمْ عَلَى اللّٰهِ تَفْتَرُوْنَ

(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள்; (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க்கற்பனை செய்கின்றீர்களா?”

ஸூரத்துல் முல்க் 67:15

هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِىْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ‌ؕ وَاِلَيْهِ النُّشُوْرُ

அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.

இந்த வசனங்களை கடந்து வரும்போது ரிஸ்க்கை தருபவன் அல்லாஹ் அவனை தவிர வேறு யாரும் தர முடியாது 

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு ரிஸ்க்கை அதிகமாகவும் தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் கொடுப்பான் 

அல்லாஹ் ஒருவருக்கு ரிஸ்க் அளிப்பதை வைத்து ஒருவரை நல்லவர் என்ற முடிவுக்கு வர முடியாது ஏனெனில் முஸ்லிம்களுக்கும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு அல்லாஹ் ரிஸ்க் அளிக்கிறான். 

இமாம் இப்னுல் கய்யிம் அல் ஜாவ்ஸிய்யா (ரஹ்) ரிஸ்க்கை 2 ஆக பிரிக்கிறார்கள் 

 الرزق نوعان رزق عام ورزق خاص ⭐ 

  1. رزق عام  பொதுப்படையான ரிஸ்க் (இது நல்லவர்களுக்கும் கிடைக்கும், முஃமின்களுக்கும் காபிர்களுக்கு கிடைக்கும், ஆரம்பத்திலுள்ளவர்களுக்கும் பின்னால் உள்ளவர்களுக்கும் கிடைக்கும் . رزق الابدان அது தான் உடலுக்குரிய ரிஸ்க் ஆகும். 

ஸூரத்து ஹூது 11:6

وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ

இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.

ஒவ்வொருவரும் அவரது தாயின் வயிற்றியிருக்கும்போதே அவருக்கு இந்த ரிஸ்க் அவர் மீது எழுதப்பட்டு விடுகிறது. 

உணவை மனிதன் தேட வேண்டும்:-

ஸூரத்துல் முல்க் 67:15

هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِىْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ‌ؕ وَاِلَيْهِ النُّشُوْرُ

அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.

ஹுதைஃபா (ரலி) – நபி (ஸல்) – இந்த உலகத்திலுள்ள எந்த ஒரு உயிரினமும் அதற்கு எழுதப்பட்ட ரிஸ்க்கை அடைந்துகொள்ளாமல் இந்த பூமியை விட்டு போகாது.(அல்பானி – ஸஹீஹ்)

ரிஸ்க் ஐ பற்றி சரியாக புரிந்து கொண்டால் ஒருவர் மீது ஒருவருக்கு பொறாமையும் வராது.