ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா
(فقه الأسماء الحسنى)
பாகம் – 36
العلي، الأعلى، المتعال
العلي – உயர்ந்தவன்
திருக்குர்ஆனில் 2 இடங்களில் அளீம் என்ற பெயருடன் அலீ என்ற பெயர் இணைந்து வருகிறது.
ஸூரத்துல் பகரா 2:255
….. وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
⭐ இன்னும் 4 இடங்களில் அல் கபீர் என்ற பெயருடன் அல் அலீ என்ற பெயரை சேர்த்து சொல்கிறான்.
ஸூரத்துல் ஹஜ் 22:62
ذٰ لِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ وَاَنَّ مَا يَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ هُوَ الْبَاطِلُ وَاَنَّ اللّٰهَ هُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ
الأعلى – மிக மேலானவன்(உயர்ந்தவன்)
ஸூரத்துல் அஃலா 87:1
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ
المتعال(எல்லாவற்றையும் மிகைத்து உயர்ந்திருக்கக்கூடியவன்)
ஸூரத்துர் ரஃது 13:9
عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ
⭐ العلي، الأعلى، المتعال இதன் வேர்ச்சொல் علو என்பதாகும்
⭐ العلو என்றால் மேலே உள்ளது, உயர்ந்தது என்று பொருளாகும்
⭐ அதிகமானவர்கள் அல்லாஹ் அனைத்தையும் அடக்கியாள்வதில் மேலானவன் என்ற கருத்தை கூறுவார்கள். ஆனால் அவன் தனது ذات (அல்லாஹ்வின் உண்மையான நிலை, வடிவம் ) ஆல் உயர்ந்தவனாக இருக்கிறான்.
⭐ அல்லாஹ்விற்கு முகம் இருக்கிறதா?
ஆம் இருக்கிறது.
⭐ என்ன ஆதாரம்?
அல்லாஹ் குர்ஆனில் தனக்கு முகம் இருப்பதாக கூறி இருக்கிறான்.
⭐ ஆனால் அல்லாஹ்வின் முகம் எப்படி இருக்கும் என்று அல்லாஹ் நமக்கு கூறவில்லை. நபி (ஸல்) சஹாபாக்களிடம் அல்லாஹ்வின் முகத்தைப்பற்றி கூறியபோதும் அது எப்படி இருக்கும் என்று சொல்லிக்கொடுக்கவில்லை. ஆகவே மனிதர்கள் யாருக்கும் அதைப்பற்றிய அறிவு இல்லை. அதைப்பற்றிய எந்தவிதமான கற்பனையும் மனிதனுக்கு அனுமதிக்கப்படவில்லை.
⭐ அதுபோலவே அல்லாஹ்வுக்கு கை இருக்கிறது, கால் இருக்கிறது, கெண்டைக்கால் இருக்கிறது என்றெல்லாம் குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம்பெறுகிறது.
ஸூரத்துர் ரஹ்மான் 55:27
وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِۚ
மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
ஸூரத்து ஃகாஃப் 50:30
يَوْمَ نَـقُوْلُ لِجَهَـنَّمَ هَلِ امْتَلَـئْتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِيْدٍ
நரகத்தை நோக்கி, “நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)!
عن أنس قال: قال رسول الله ﷺ: لا تزال جهنم يلقى فيها وتقول: هل من مزيد؟ حتى يضع رب العزة قدمه فيها، فينزوي بعضها إلى بعض وتقول: قط قط وعزتك وكرمك، ولا يزال في الجنة فضلٌ حتى ينشئ الله لها خلقاً آخر فيسكنهم الله تعالى في فضول الجنة[1]، رواه مسلم.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(நரகவாசிகள்) நரகத்தில் போடப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். நரகம் (வயிறு நிரம்பாமல்) “இன்னும் அதிகம் இருக்கிறதா?” என்று கேட்கும்; இறுதியில் கண்ணியத்தின் அதிபதி (யான இறைவன்), நரகத்தில் தனது பாதத்தை வைப்பான். உடனே நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் ஒட்டிக்கொள்ளும். பிறகு, “போதும்; போதும். உன் கண்ணியத்தின் மீதும், உன் கொடையின் மீதும் சத்தியமாக!” என்று நரகம் கூறும்.
சொர்க்கத்தில் இடம் மீதி இருந்து கொண்டேயிருக்கும். இறுதியில், சொர்க்கத்திற்கென அல்லாஹ் புதியவர்களைப் படைத்து, சொர்க்கத்தில் மீதியுள்ள இடத்தில் அவர்களைக் குடியமர்த்துவான்.
இதை, “நாம் நரகத்திடம் “உனக்கு (வயிறு) நிரம்பிவிட்டதா?” என்று கேட்கும் நாளில் “இன்னும் அதிகம் இருக்கிறதா?”என்று அது கேட்கும்” (50:30) எனும் இறைவசனத்தி(ன் விளக்கவுரையி)ல் அப்துல் வஹ்ஹாப் பின் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book :51 முஸ்லீம்
⭐ அகீதா தெளிவான முறையில் தெரிந்தவர்களுக்கு இந்த விஷயத்தில் எந்த வித குழப்பமும் ஏற்பட வாய்ப்பில்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்ததை நாம் அவ்வாறே ஏற்றுக்கொள்வது தான் நமக்கு சிறந்ததாகும்.
⭐ அல்லாஹ்வும் அவனது தூதரும் எதை இருக்கிறது என்று நமக்கு கற்றுத்தந்தார்களோ அதை அவ்வாறே ஏற்றுக்கொள்வோம் அவர்கள் எதை கற்றுத்தரவில்லையோ அதை பற்றி எந்த ஒரு கருத்தும் முஸ்லிம்கள் கூறமாட்டார்கள்.
⭐ ஆகவே அல்லாஹ்வின் ذات ஐ அரபு மொழியிலேயே சொல்வது நமக்கு சிறந்தது. அதை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபடுவது நம்மை வீணான குழப்பத்திற்கு இட்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துரைகள் (Comments)