ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா
(فقه الأسماء الحسنى)
பாகம் – 39
⭐ அந்த வழிகெட்ட கொள்கையினர் இட்டுக்கட்டி கூறும் மேலும் ஒரு ஆதாரம்
ஸூரத்துல் ஹதீத் 57:4
….. وَهُوَ مَعَكُمْ اَيْنَ مَا كُنْتُمْؕ……
நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான்
ஸூரத்துத் தவ்பா 9:40
…… لَا تَحْزَنْ اِنَّ اللّٰهَ مَعَنَا ۚ……
………“கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்”………..
ஸூரத்து ஃகாஃப் 50:16
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.
⭐ இந்த வசனங்களை முன்வைத்து அல்லாஹ் மனிதர்களோடு இருக்கிறான் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.
⭐ இஸ்லாத்தில் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு ஹதீஸையும் ஒரு குர்ஆன் வசனத்தையும் மட்டும் வைத்து ஒரு முடிவு எடுத்தல் கூடாது. மாறாக அந்த தலைப்பில் வரும் அனைத்து குர்ஆன் வசனங்களையும் ஹதீஸையும் வைத்தே முடிவுகளை எடுக்க வேண்டும்.
⭐ ஆகவே இந்த கருத்து பிற குர்ஆன் வசனங்களுக்கும் ஹதீஸுகளுக்கும் மாற்றமாக இருக்கிறது.
கருத்துரைகள் (Comments)