ஃபிக்ஹுல் அஸ்மாவுல் ஹுஸ்னா
(فقه الأسماء الحسنى)
பாகம் – 40
الرحمن على العرش استوى
அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான் என்று குர்ஆனில் 7 இடங்களில் இடம்பெறுகிறது.
⭐ استوى
அபுல் ஆலியா (ரஹ்) என்ற தாபிஹ் استوى என்ற சொல்லுக்கு உயர்ந்திருக்கிறான் என்பது பொருளாகும்.
⭐ சில தர்ஜமாக்களில்
அர்ரஹ்மான் அர்ஷின் மீது தனது ஆட்சியை அமைத்தான் என்ற கருத்து இடம்பெற்றிருக்கும். அது மிகவும் தவறான கருத்தாகும்.
மாறாக அர்ரஹ்மான் அர்ஷின் மீது உயர்ந்திருக்கிறான் என்பதே சரியான கருத்தாகும்.
⭐ குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும்போது
அல்லாஹ் அவர்களுக்கு மேலே இருக்கிறான்
அல்லாஹ் உயர்ந்தவனாக இருக்கிறான் என்றெல்லாம் வசனங்கள் இடம்பெறுகிறது.
⭐ குர்ஆனை அல்லாஹ் இறக்கி வைத்தான் என பல இடங்களில் குறிப்பிடுகிறான். அவன் மேலே இருப்பதால் தான் இறக்கினோம் என்று கூறுகிறான்.
ஸூரத்துல் ஹிஜ்ர் 15:9
اِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.
ஸூரத்துல் கத்ரி 97:1
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ ۖ ۚ
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
ஸூரத்து ஃபாத்தி 35:10
مَنْ كَانَ يُرِيْدُ الْعِزَّةَ فَلِلّٰهِ الْعِزَّةُ جَمِيْعًا ؕ اِلَيْهِ يَصْعَدُ الْـكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يَرْفَعُهٗ ؕ وَ الَّذِيْنَ يَمْكُرُوْنَ السَّيِّاٰتِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ ؕ وَمَكْرُ اُولٰٓٮِٕكَ هُوَ يَبُوْرُ
எவன் இஜ்ஜத்தை – கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு – இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
حديث أبي هريرة ⭐
قال: قال رسول الله ﷺ: من تصدق بعَدل تمرة من كسب طيب -ولا يقبل الله إلا الطيب- فإن الله يقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم فَلُوَّه حتى تكون مثل الجبل
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்லதை தவிர வேறெதுவும் அல்லாஹ்விடம் ஏறிச்செல்லாது . யார் தூய்மையான சம்பாத்தியத்திலிருந்து தர்மம் செய்கிறாரோ அதை அளவற்ற அருளாள(னான இறைவ)ன் தனது வலக்கரத்தால் வாங்கிக்கொள்கிறான். அது ஒரு பேரீச்சங்கனியாக இருந்தாலும் சரியே! அது அந்த அருளாளனின் கையில் வளர்ச்சி அடைந்து மலையைவிடப் பெரியதாகிவிடுகின்றது. உங்களில் ஒருவர் “தமது குதிரைக் குட்டியை” அல்லது “தமது ஒட்டகக் குட்டியை” வளர்ப்பதைப் போன்று.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Book :12 ஸஹீஹ் முஸ்லீம்
ஸூரத்துல்ஆல இம்ரான் 3:55
اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ
“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
ஸூரத்துல் முல்க் 67:16, 17
ءَاَمِنْتُمْ مَّنْ فِىْ السَّمَآءِ اَنْ يَّخْسِفَ بِكُمُ الْاَرْضَ فَاِذَا هِىَ تَمُوْرُۙ
வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.
اَمْ اَمِنْتُمْ مَّنْ فِى السَّمَآءِ اَنْ يُّرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ؕ فَسَتَعْلَمُوْنَ كَيْفَ نَذِيْرِ
அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
⭐ நபி (ஸல்) – நீங்கள் பூமியில் உள்ளவர்களுக்கு அன்பும் இரக்கமும் காட்டினால் வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பும் இரக்கமும் காட்டுவான் (திர்மிதி)
⭐ நபி (ஸல்) – ஹஜ்ஜதுல் விதாவில் – தனது ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்தி யா அல்லாஹ் நீ இதற்கு சாட்சி என்று 3 முறை கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லீம்)
⭐ நபி (ஸல்) மிஹ்ராஜ் சென்றபோது வானத்தில் ஏறிச்சென்று அல்லாஹ்விடம் பேசிவிட்டு வந்தார்கள்(புஹாரி, முஸ்லீம்)
⭐ மேற்கூறப்பட்ட ஆதாரங்கள் அல்லாஹ் மேலே இருக்கிறான் என்பதை உணர்த்துகிறது. இந்த கருத்தை உலகிற்கு வந்த நபிமார்கள் அனைவரும் கூறியிருக்கிறார்கள்.
ஸூரத்துல் முஃமின் 40:36, 37
وَقَالَ فِرْعَوْنُ يٰهَامٰنُ ابْنِ لِىْ صَرْحًا لَّعَلِّىْۤ اَبْلُغُ الْاَسْبَابَۙ
(இவ்வளவு உபதேசித்த பின்னரும்:) “ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக – நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு!
اَسْبَابَ السَّمٰوٰتِ فَاَطَّلِعَ اِلٰٓى اِلٰهِ مُوْسٰى وَاِنِّىْ لَاَظُنُّهٗ كَاذِبًا ؕ وَكَذٰلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوْٓءُ عَمَلِهٖ وَصُدَّ عَنِ السَّبِيْلِ ؕ وَمَا كَيْدُ فِرْعَوْنَ اِلَّا فِىْ تَبَابٍ
“(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;” என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன; இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை.
கருத்துரைகள் (Comments)